VJ Maheshwari | என் இன்ஸ்டாகிராமை என் பையன் பாக்கமாட்டார்.. டாஸ்மாக் சென்றது எதற்கு? VJ மகேஸ்வரி சொன்ன பதில்கள்..!
"எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணி வாழ சொல்றாங்க, ஏன் குடும்பத்துக்காக மனைவி அட்ஜஸ்ட் பண்ணனும், பையனுக்காக அம்மா அட்ஜஸ்ட் பண்ணனும், ஏன் பையனுக்காக அப்பா அட்ஜஸ்ட் பண்ணனும்ன்னு சொல்றது இல்ல?"
ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்த பிரபல பெண் தொகுப்பாளினியான திகழ்ந்தவர் மகேஸ்வரி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பள்ளி-கல்லூரி எல்லாம் சென்னையில் தான் முடித்தார். இவர் முதலில் விஜே வாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அவ்வளவு விஜேக்கள் இருந்தாலும் ஒரு சில விஜேக்களால் மட்டுமே இன்று வரை மக்கள் நினைவில் நிற்க முடிகிறது. அப்படி 90’ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை நினைவில் வைத்திருக்கக் கூடிய விஜேக்களுள் ஒருவர்தான் விஜே மகேஸ்வரி. அதிலும் குறிப்பாக இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான் தொகுப்பாளராக சின்னத்திரை பக்கம் சென்றார். அதோடு மகேஸ்வரி தன் எத்துப்பல் சிரிப்பாலும், க்யூட்டான பேச்சாலும், அதிகமான இளைஞர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருந்தார்.
இடையில் திருமணம் ஆனதால் மகேஸ்வரி கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். மேலும், மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார். அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார். இவர் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.
இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அதனால் தான் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதிலும் சமீப காலமாக மகேஸ்வரி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை விஜே மகேஸ்வரியின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி விட்டார்கள். அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்றால், நடிகை விஜே மகேஸ்வரி அவர்கள் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்குவதற்கு நின்று இருக்கிறார். பின் சரக்கு விற்கும் நபரிடம் சரக்கு பற்றி கேட்டிருக்கிறார். உடனே மகேஸ்வரி அக்கம் பக்கம் திரும்பி யாராவது பார்க்கிறார்களா? என்று பார்க்கிறார். இப்படி இவர் டாஸ்மாக் கடையில் நின்று சரக்கு வாங்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பானது. இதை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னாச்சு? இது ஏதாவது பிராங்கா? இல்லை உங்களுக்கு சரக்கு வேண்டும் என்று வாங்குகிறீர்களா? என்று பலவிதமாக கமெண்ட் போட்டு வந்தார்கள்.
கடைசியில் அது ஒரு நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ என்று தெரிந்தது. பிறகு அந்த இன்டர்வ்யூ விடியோ வெளியாகி வைரலானது. ட்ரெண்டிங்கில் பலரும் பார்த்து ரசித்தனர். இன்ஷா வீடியோவில் தன் வாழ்வின் கஷ்டங்களை பேசியிருந்த மேகேஸ்வரி, மிகவும் உணர்ச்சிகரமான வார்த்தைகளை பேசினார்.
விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்துவரும் மகேஸ்வரி ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ”என்னுடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. எனக்கு யார் மேலேயும் நம்பிக்கை வர மாட்டேங்குது, என்னுடைய பையன், என்னுடைய அம்மா, என்னுடைய வேலை இதில் மட்டும்தான் நான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். என்னை புரிந்து கொண்டு, என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருக்கிறது. என் அம்மாவைப் போலவே நானும் சிங்கிள் மதராக இருக்கிறேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார் மகேஸ்வரி. அந்த வீடியோவில் அவர் பேசியதை பார்த்த பலர் கண்ணீர் மல்க கமெண்டுகளை உதிர்த்தனர். அதில் வந்த கமெண்டுகளை வைத்தே ஒரு இன்டர்வ்யூவை ஏற்பாடு செய்தது அந்த சேனல். அந்த கமென்ட் படிக்கும் செக்ஷனில் எல்லாவற்றையும் கொஞ்சம் விரிவாக பேசினார் வீஜே மகேஸ்வரி.
கணவர் இல்லாமல் தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம் என்று கண்ணீருடன் தெரிவித்த அவர். "சிங்கிள் பேரண்ட் என்பதை நார்மலைஸ் பண்ணனும், அதனை தனியாக பார்ப்பதுதான் கஷ்டமா இருக்கு, ஒண்ணு எக்ஸ்ட்ரீம் லெவல் சிம்பத்தி இருக்கும், பரிதாபம் வேண்டாம், அது கான்ஃபிடன்ஸ குறைக்கும், இல்லன்னா அட்வான்டேஜ் இருக்கும், ரெண்டும் இல்லாம நடுவுல ஒன்னு இருக்கு, அத யாருமே இங்க தர்றது இல்ல… சிலபேர் சொல்வாங்க குழந்தைக்காக இன்னோரு கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு, இல்ல இங்க ஒரு சம்பாத்தியம் தான் இல்ல, மத்தபடி எல்லா குடும்பத்த போலவும்தான் நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம். எனக்கு ஒரு துணையை தேடணும்னு நெனைக்குறப்போ, வர்றவங்க, உனக்கு நான் வாழ்க்க தர்றேன், எனும் டோனில் பேசுவார்கள், தியாகி மாதிரி பேசுவார்கள், நீ கவல படாதம்மா உன் பையனையும் சேர்த்து நான் பாத்துக்குறேன். இந்த வார்த்தைகளே போர் அடிக்குது. இந்த மைண்ட்செட் மாறவே இல்ல. 12 வயசுல என் பையனுக்கு போய் இனிமே இவருதான் அப்பான்னு நான் எப்படி சொல்லுவேன், நேச்சுரலா முடியாது, ஆனா ஒரு புரிதல்ல இருக்கலாம், ஆனா அதுல நெறைய பிரச்னை இருக்கு" என்று கூறியிருந்தார்.
மேலும் சிறுவயதில் ஏன் தேடவில்லை என்று கேட்கும்போது, "அப்போது எனக்கு அது தோன்றவில்லை, அப்போதுதான் ஒரு பெரிய துக்கம் நடந்து வெளியே வருகிறோம், அப்போது உடனடியாக எப்படி அத செய்றது. எனக்கு கஷ்டங்களெல்லாம் இருக்கு ஆனாலும் அதனை தாங்கி வாழ்ந்திருக்கிறேன் எனும்போது, அது தான் சரி என்று மக்கள் சொன்ன பின்பு அதற்கு மேல் வேறு என்ன இருக்கிறது. இரவு முழுவதும் தூங்கவில்லை, கமென்ட்டுகளை படித்து படித்து அழுதுகொண்டு இருந்தேன்" என்றார்.
கிளாமர் குறித்து அந்த வீடியோவின் கீழே கமெண்ட் செயதிருந்தவர்களுக்கு பதில் கூறியபோது, "நான் என்ன வேலை செய்றேன் என்பதை வைத்து நான் நல்ல அம்மாவா இல்லையா என்பதை ஜட்ஜ் பண்ணக்கூடாது, என் பையனும் அதை பண்ண மாட்டான் நாளைக்கு, இப்போ அவன் வயசுக்கு என் இன்ஸ்டாகிராம அவன் பாக்க வேண்டிய தேவை அவனுக்கு இல்லை, நாளைக்கு பாத்தாலும் அவன் என்னை அதை வைத்து மதிப்பிடப்போறதும் இல்ல, நான் அப்படி தான் வளர்த்துருக்கேன் அவன. நான் இவ்வளவு போராடினதுக்கு அப்புறம் என் உடை உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதில் எனக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அப்புறம் எனக்கு நயன்தாரா மாதிரி எல்லாம் இருக்கணும்ன்னு ஆசைதான், நல்லா மேக்கப் பண்ணிக்கிட்டு, அழகா தெரியணும்ன்னு, ஆனால் நான் அவ்ளோ நாள் அதை செய்யாம இருந்தேன், நான் என் பையன நல்ல வழிகள்ல கூட்டிட்டு போறேன்னு தெரிஞ்சதும், எனக்காகவும் சில விஷயங்கள் செய்யலாம்ன்னு முடிவெடுதேன், அப்படி எனக்கு புடிச்சாத செஞ்சேன், தப்பான விஷயம் எதுவும் பண்ணல. நம்மள குடும்பத்துல ஒருத்தரா பாத்துட்டதுனால ஒரு சிலருக்கு தப்பா தெரியுதுன்னு நெனைக்குறேன், ஆனா அது தெளிவாக என் வேலை, ப்ரொஃபஷன்." என்று கூறினார்.
மேலும் அந்த வீடியோவின் கமெண்டுகளில் அவரை போலவே தனியாக நின்று மக்களை வளர்க்கும் தாயார்கள் ஆதரவான வார்த்தைகள் பேசி இருந்தனர், அதனை படித்த ஆஷிக்கிடம் அதற்கான பதில்களையும் புன்னகை பூத்தபடியே கூறினார். மேலும் பேசுகையில்,"நான் ஒரு அம்மாதான், ஆனாலும் எனக்கும் நான் ஓது பெண்ணா சந்தோஷமா வாழறதுக்கான் எல்லா ரைட்ஸும் இருக்குல்ல. எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணி வாழ சொல்றாங்க, ஏன் குடும்பத்துக்காக மனைவி அட்ஜஸ்ட் பண்ணனும், பையனுக்காக அம்மா அட்ஜஸ்ட் பண்ணனும், ஏன் பையனுக்காக அப்பா அட்ஜஸ்ட் பண்ணனும்ன்னு சொல்றது இல்ல?" என்று சரமாரி கேள்விகளை எழுப்பினார். அதன் பிறகு பல கமெண்டுகளில் அவரது உத்வேகத்தை வாழ்த்தி இருந்தனர். அதில் பல கமெண்டுகள் அவரை கண்ணீர் விட செய்ததாகவும் தெரிவித்தார். சில கமெண்டுகளை அவருக்கு பிடித்த கமென்ட் என்று கூறியிருந்தார்.
மகேஸ்வரி தற்போது விக்ரம், மகான், சாணிக்காயிதம் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மகேஸ்வரி. அண்மையில் வெளியான சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'ரைட்டர்' படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.