Harish Kalyan - Athulya Ravi | அடங்காதே இயக்குநருடன் கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்.. கதை என்ன தெரியுமா?
அடங்காதே படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் நடித்த ப்யார் ப்ரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் ப்ரியா பவானி சங்கருடன் அவர் நடித்த ஓ மன பெண்ணே படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அவர் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை வைத்து அடங்காதே படத்தை இயக்கியிருக்கும் சண்முகம் முத்துசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் மணிவண்ணன், தங்கர்பச்சானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். இந்த மாதத்தின் இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
வடசென்னையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்தப் படத்தில் அமீர், யோகிபாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் தாதாவாகவும், அதுல்யா ரவி வழக்கறிஞராகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சண்முகம் முத்துசாமி இயக்கிய அடங்காதே படம் இந்த மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலோ வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: kili paul | ‛யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - பாலிவுட் பாடல்களால் அதிர விடும் தான்சான்யா அண்ணன், தங்கச்சி!
நடிகர் கார்த்திக் குமார் இரண்டாவது திருமணம்… பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்!
Rajini Birthday Photo: தனுஷ் மட்டும் மிஸ்ஸிங்... மற்றபடி தடபுடலாய் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா!
EDISON AWARDS | மாஸ்டர் முதல் மாநாடு வரை... எடிசன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் லிஸ்ட்!