![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajini Birthday Photo: தனுஷ் மட்டும் மிஸ்ஸிங்... மற்றபடி தடபுடலாய் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா!
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 72 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Rajini Birthday Photo: தனுஷ் மட்டும் மிஸ்ஸிங்... மற்றபடி தடபுடலாய் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா! Rajinikanth Celebrates 72nd birthday with his family members soundarya rajini, latha- See Photo Rajini Birthday Photo: தனுஷ் மட்டும் மிஸ்ஸிங்... மற்றபடி தடபுடலாய் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/ef7fdbb923677eb10dba9e7fc2d612e6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் முக்கிய மற்றும் முன்னணி நகரும், சூப்பர் ஸ்டார் என அறியப்படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் என அனைவரும் வாத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஒரு நடிகருக்கு நடிகர்களே ரசிகர்களாக இருப்பது ரஜினி , கமல் போன்ற இரு பெரும் சினிமா சகாப்தங்களுக்குதான் பொருந்தும் . அதிலும் ரஜினிக்கு சொல்லவே தேவையில்லை... நேற்று அவரது பிறந்த நாளில் பல சினிமா பிரபலங்கள் உருக்கத்துடனும் பெருமையுடனும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நேற்று தனது 72 வயதில் அடியெடுத்து வைத்தார். கிட்டத்தட்ட 46 வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற அரியணையில் அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் இந்த இமாலய வெற்றி அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 72 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
Happpy birthday my life 💜💜💜#superstar #Thalaivar #MyFather https://t.co/3fJgj83aCv
— soundarya rajnikanth (@soundaryaarajni) December 13, 2021
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தில் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் அவரது மகன் யாத்ரா, லிங்கா உள்ள நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Happy birthday my thalaiva !! The one and only SUPERSTAR RAJINIKANTH sir .. love you so much ❤️❤️❤️❤️❤️
— Dhanush (@dhanushkraja) December 11, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)