marakkar on ott | ஓடிடிக்கு வருகிறார் அரபிக்கடல் சிங்கம் ‘மரைக்காயர்’ - குஷியில் லாலேட்டன் ரசிகர்கள்!
இந்தப் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது
மலையாளத் திரையுலகில் மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் மரைக்காயர். பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. மோகன் லால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.
Whoa!!#Marakkar arrives on @PrimeVideoIN on 17th December!! 🔥🔥#MarakkarOnPrime@Mohanlal @priyadarshandir @antonypbvr @SunielVShetty @akarjunofficial @ManjuWarrier4 @kalyanipriyan @impranavlal @KeerthyOfficial @aashirvadcine pic.twitter.com/kPoZTPchvY
— BINGED (@Binged_) December 13, 2021
ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் கடற்படையை உருவாக்கிய குன்ஹாலி மரைக்காயரின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு பின்னர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்தது. இந்தப் படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி மரைக்காயர் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Mohanlal’s big budget film #Marakkar coming to Amazon Prime, December 17th. 2 weeks from theatrical release. pic.twitter.com/viV2ez9njr
— LetsOTT GLOBAL (@LetsOTT) December 13, 2021
மரைக்காயர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் வெகுவாக கவர்ந்தது, முன்னதாக அந்த கதாபாத்திரத்தை தழுவி கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram