Cinema Round-Up : காலமான காமெடி நடிகர்; விஜய்சேதுபதியை வென்ற விஷ்ணு..வாரிசு அப்டேட்! - கோலிவுட் ரவுண்ட் அப்!
Cinema Round-up : கோலிவுட் வட்டாரத்தை சோகமடைய செய்த செய்தி முதல் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் வரையிலான டாப் 5 சினிமா செய்திகள் இங்கே!
வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் காலமானார்
View this post on Instagram
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன்.மதுரையை சேர்ந்த இவர் உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த, ஹரி வைரவன் இன்று அதிகாலை 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரத்தம் டீசரில் இணையும் மூன்று இயக்குநர்கள்
. @csamudhan இயக்கத்தில்
— vijayantony (@vijayantony) December 2, 2022
நண்பர்கள் @VetriMaaran, @vp_offl & @beemji சிறப்பு தோற்றத்தில் #ரத்தம் #rathamteaser டிசம்பர் 5 மாலை 5 மணிக்கு release ஆகிறது☄️
பாசப்பறவைகள் கீழை📺⚒💣🔥⬇️ pic.twitter.com/byll8BdLEG
இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் 'ரத்தம்'. விஜய் ஆண்டனி ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார் மற்றும் நந்திதா ஸ்வேதா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரில் சிறப்பு தோற்றத்தில் இடம் பெறுகிறார்கள் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், பா. ரஞ்சித் மற்றும் வெங்கட் பிரபு என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. இவர்களின் கூட்டணியில் வெளியாகவிருக்கும் 'ரத்தம்' படத்தின் டீசர் வீடியோ வரும் டிசம்பர் 5ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற தகவலை வெளியிட்டிட்டு இருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி.
வாரிசு படத்தின் இரண்டாம் பாடல்
#VarisuSecondSingle - #TheeThalapathy 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) December 2, 2022
THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal#30YearsOfVijayism pic.twitter.com/bpZIjNRLq4
வாரிசு படத்தின் தயாரிப்புகுழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில், “ 30 வருட விஜயின் சினிமா வாழ்கையை கொண்டாடும் நேரமிது.. வாரிசு அப்டேட் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும்” என குறிப்பிடப்பட்டது.
அதன் பின் வந்த அப்டேட்டில், வாரிசு படத்தின் இரண்டாம் பாடலாக “தீ தளபதி” என்ற பாடல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியிடப்பட்ட போஸ்டரின் பின்னணியில் செஸ் போர்ட்டில் இடம் பெறும் ராஜா காயின் தீ பிடித்து எரிவது போல போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
தொடங்கியது ஹன்சிகாவின் திருமண விழா
நடிகை ஹன்சிகா, சோஹைல் கதுரியாவை திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார். அதுதொடர்பான பல போட்டோக்களையும் பதிவி செய்தார் ஹன்சிகா. அந்த வகையில் நேற்று சூஃபி இசை கச்சேரியுடன் ஹன்சிகாவின் திருமண விழா தொடங்கியது. டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும் நடக்கவுள்ளது. பின், முண்டோடா அரண்மனையில் வைத்து டிசம்பர் 4 ஆம் தேதி திருமண நிகழ்வும் நடைபெறவுள்ளது. தற்போது, ஹன்சிகாவின் திருமண சூஃபி இசை நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றுள்ளது. நேற்று எடுக்கப்பட்ட பல போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் சுழன்று வருகிறது.
கட்டா குஸ்தி Vs டிஎஸ்பி
#GattaKusthi the fun film has picked up after the positive reviews & WOM! @TheVishnuVishal & #AishwaryaLekshmi is winning hearts. pic.twitter.com/ZBfUGzZujy
— Sreedhar Pillai (@sri50) December 3, 2022
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கட்டா குஸ்தி படத்தின் காலை முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் “இது ஒரு பக்கவான ஃபேமிலி படம், என்ற பாசிட்டிவான கருத்துக்களை ஷேர் செய்தனர். அத்துடன் பல திரை விமர்சகர்களும் இப்படமானது, விஜய்சேதுபதியுனு டிஎஸ்பி படத்தை விட நன்றாகவுள்ளது என்று கூறினர். இதிலிருந்து, ஏட்டிக்கி போட்டியாக வெளியான இரு படங்களில் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தியே வெற்றி பெற்றது என்பது தெரிகிறது. அத்துடன், விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி என்பதை காட்டிலும் ஐஸ்வர்யா லஷ்மியின் கட்டா குஸ்தி என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.