Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
குட் பேட் அக்லி படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவின் வித்தியாசமான கெட்டப் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருக்கும்போது அஜித் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அஜித்தின் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டும் அஜித்தின் லுக்:
மார்க் ஆண்டனி படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் கூட்டணி அமைத்திருப்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் போஸ்டரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் அஜித் மிகவும் வித்தியாசமான வேடத்தில் மாறுபட்ட கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், அஜித் குட் பேட் அக்லி படத்திற்கு தயாரானார். இதையடுத்து, குட் பேட் அக்லி லுக்கிற்கு மாறிய அஜித்தின் காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் நடக்கும் குட் பேட் அக்லி ஷூட்டிங்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் அஜித், பிரசன்னா, த்ரிஷா ஆகியோர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகியது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷாவின் போட்டோக்கள் நேற்று வெளியானது.
குறிப்பாக, இதுவரை வெள்ளை நிற முடியுடன் மட்டுமே வெளியில் உலா வந்த அஜித் இளமைத் தோற்றத்தில் கருப்பு நிற முடியுடன் ஹாலிவுட் நடிகர் தோற்றத்தில் காட்சி தரும் இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இணையத்தை கலக்கும் அஜித் - த்ரிஷா புகைப்படம்:
இந்த படத்தில் கைகளில் டாட்டூ குத்தி வெள்ளை நிற சட்டை மற்றும் பேண்டுடன் நடந்து வரும் லுக் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தை அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் இதுபோன்று இளமைத் தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், த்ரிஷாவின் தோற்றமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அஜித் – த்ரிஷா ஜோடி ஏற்கனவே ஜீ, கிரிடம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது விடாமுயற்சி படத்திலும் அஜித் - த்ரிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர். அந்த படத்திற்கு பிறகு தற்போது குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றனர்.