Happy Birthday Sid Sriram | "2 வருசம் வாய்ப்பே இல்லை; இப்போ 2 நிமிஷம்கூட ஓய்வே இல்லை" - சித் ஶ்ரீராம்

தமிழ்ல சித் ஶ்ரீராமின் தமிழ் உச்சரிப்புல எந்த பிரச்சனைன்னாலும், அதை சரிபண்றது இவருடைய அம்மா லதா ஶ்ரீராம்தான் இதை சரி பண்ணுவாங்களாம். எப்போவும் மியூசிக் டவுட் க்ளியர் பண்றதும் லதா ஶ்ரீராம்தான்

FOLLOW US: 

'மயக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரர் சித் ஶ்ரீராம். இவரது குரலில் 'கடல்' படத்திலிருந்து 'அடியே' பாட்டு துவங்கும்போது இந்தக் குரலில் கரைந்து போகாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. 'ஐ' படத்தின் 'என்னோடு நீ இருந்தால்' பாட்டில் காதலின் வலியை உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளின் வழியே நமக்கு கடத்தியிருப்பார் சித். உச்சக்கட்ட காதலின் இன்பத்துக்கும் அதே காதலின் வலியை கடக்கவும் சித் எப்போதும் மருந்தாக இருப்பாரென்று அவரின் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டுகளே உணர்த்தும். சித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைக் கொண்டாடும் ஸ்பெஷல் பதிவு இது. 


Happy Birthday Sid Sriram |


''பிறந்தது சென்னை மயிலாப்பூர். 1 வயசு இருக்கும்போதே யூ.எஸ். செட்டிலானவர். அம்மா கர்நாடக இசைப்பாடகி. இதனால மூன்று வயசுல இருந்தே அம்மாகிட்ட பாட்டு கத்துக்க ஆரம்பிக்கிறாரு சித். கர்நாடிக் ம்யூசிக்ல அம்மாவை மாதிரியே பெரிய தேர்ச்சியோட வெளிய வராரு. சொல்லப்போனா சித் ஶ்ரீராமின் முதல் குரு, அம்மா லதா ஶ்ரீராம். சித் ஸ்ரீராமுக்கு ஏக செல்லம் இவரின்  தங்கை பல்லவி ஶ்ரீராம். தமிழ்ல சித் ஶ்ரீராமுக்கு உச்சரிப்புல பிரச்சனை வந்தா இவருடைய அம்மா லதா  ஶ்ரீராம்தான் இதை சரி பண்ணுவாங்களாம். எப்போவும் மியூசிக் டவுட் க்ளியர் பண்றதும் லதா ஶ்ரீராம்தான். சின்ன வயசுல இருந்து இளையராஜா இசை மேல சித்துக்கு பெரிய ஈர்ப்பு இருந்திருக்கு. இதனாலயே தமிழ் சினிமால பாடகராவும், இசையமைப்பாளராவும் ஆகணும்னு சித் நினைச்சி இருக்கார். இளையராஜாவோட இசை பிடித்த அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜாகீர் ஹுசைன் மியூசிக்கும் சித்தின் ஆல் டைம் ஃபேவரைட். 


இசையை சின்ன வயசுல இருந்தே கத்துக்கிட்ட சித் ஶ்ரீராம் பரதநாட்டியம் ஆடுறதுலயும் விருப்பமுள்ளவர். அரங்கேற்றம் முடிச்சிருக்கும் ஶ்ரீராம், மேடை கச்சேரிகளில் சில நேரங்களில் பரதநாட்டியமும் ஆடுவதுண்டு. இந்தியாவுக்கு வருஷத்துக்கு ஒரு முறை வருவதை வழக்கமா வெச்சிருக்கிற ஶ்ரீராம், வரும்போதேல்லாம் இங்கே மியூசிக் ஆல்பம், மேடை கச்சேரிகள் பண்ணிட்றாரு. இப்படி ஒரு முறை சித் ஶ்ரீராம் பண்ணுன கச்சேரியை பார்த்துதான் ஏ.ஆர்.ரஹ்மான் சித் ஶ்ரீராமை தொடர்புகொண்டு பேசியிருக்கார். ரஹ்மானின் மெசேஜ் பார்த்தவுடன் மிகவும் பரவசம் அடைஞ்ச சித்துக்கு கொஞ்ச நேரத்துக்கு நிதானமே இல்லயாம். 'என்னோட இசையில் ஒரு பாட்டு பாட முடியுமானு' ரஹ்மான் கேட்க உடனே ஓகே சொன்ன சித்துக்கு ஸ்கைப் வழியா எப்படி பாடணும்னு முதல்ல சொல்லி கொடுத்திருக்கார் ரஹ்மான். 


Happy Birthday Sid Sriram | Happy Birthday Sid Sriram |

பிறகு, 'கடல்' படத்தோட 'அடியே' பாட்டு ரஹ்மான் ஸ்டூடியோவுல ரெக்கார்டிங் செஷன் முடிஞ்சிருக்கு. இந்தப் பாட்டுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்துல இருந்து 'என்னோடு நீ இருந்தால்' பாட்டும் சித் பாடியிருக்கார். இந்த ரெண்டு பாட்டும் ரசிகர்கள் மத்தியில் பெருசா பேசப்பட்டாலும் இதுக்கு பிறகு சித்துக்கு எந்த வாய்ப்புகளும் வரலையாம். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் வரைக்கும் தன்னுடைய மியூசிக் ஆல்பம் வேலைகள்ல மட்டும் சித் ஶ்ரீராம் ஈடுபட்டிருக்கார். இப்படியே போயிட்டு இருந்தப்போ அனிருத் போன் பண்ணி, 'நானும் ரெளடிதான்' படத்துக்காக 'என்னை மாறும் காதலே' பாட வாய்ப்பு கொடுத்திருக்கார். இதுக்கப்புறம்தான் சித் ஶ்ரீராம் கொஞ்சமும் டைம் இல்லாம தொடர்ந்து பாட்டு, ரெக்கார்டிங்னு ஓடிக்கிட்டே இருக்கும் சூழல் வந்திருக்கு. 'தள்ளிப்போகாதே' 'மறுவார்த்தை பேசாதே' 'ஹே பெண்ணே' என்று சித் ஶ்ரீராம் பாடல்களை லூப்ல விட்டுட்டு ரசிகர்களை தூக்கம் மறந்து சுத்த வெச்சிருக்கார். தன்னுடைய வசீகரக் குரல் மூலமாக சித் ஶ்ரீராம்.  இரண்டு வருஷம் வாய்ப்பு இல்லாம இருந்த சித் ஶ்ரீராமுக்கு ரெண்டு நிமிஷம் இடைவெளி இல்லாம இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. 

 

'என்.ஜி.கே; படத்துல ஸ்ரேயாகோஷல் கூட சித் சேர்ந்து பாடுன 'அன்பே பேரன்பே' 'வடசென்னை' 'என்னடி மாயாவி' 'விஸ்வாசம்' 'கண்ணான கண்ணே'னு சித் குரல்ல பலரும் தங்களை மறக்க, சித்துக்கு மியூசிக் டைரக்டரா ஆகணும்னு ஆசை மனசுக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துருக்கு. இந்த நேரத்துல மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து சித்துக்கு இசையமைப்பாளரா வேலைபார்க்க வாய்ப்பு தேடி வந்திருக்கு. மணிரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் மூலமாக தன்னுடைய இசையமைப்பாளர் கனவை தீர்த்திருக்கிறார் சித். இந்தப் படத்துல சித் பாடுனா பாடல்களும் படத்துக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துச்சு. 

 

வாழ்க்கையில நடந்த எல்லாமே மேஜிக். இப்போவும் சில விஷயங்களை நம்ப முடியலன்னு ஃபீல் பண்ற சித் ஶ்ரீராமுக்கு ரஜினிகாந்த்னா அவ்வளவு பிடிக்கும். த்ரிஷாவின் ரசிகரும் கூட. வாழ்க்கையில ஜெயிக்க பொறுமை கொஞ்சம் முக்கியம்னு சொல்லும் சித் ஶ்ரீராம், பெரிய உயரங்களை தொடுவாரு. Happy birthday Sid.
Tags: ar rahman music sid sriram birth day manirathnam

தொடர்புடைய செய்திகள்

Maanadu Meherezylaa | மாநாடு பாடல் டீசர் இன்று ரீலிஸ்!

Maanadu Meherezylaa | மாநாடு பாடல் டீசர் இன்று ரீலிஸ்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

டாப் நியூஸ்

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!