Entertainment Headlines: ஷாக் கொடுத்த லோகேஷ்... 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு... மீண்டும் இணையும் அஜித்-சிவா... இன்றைய சினிமா செய்திகள்
Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

சம்பளம் வேணும்; கால்ஷீட் தரமாட்டீங்களா? வசமாக சிக்கும் டாப் லிஸ்ட் நடிகர்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களிடம் பல விஷயங்களுக்கு ஒப்புதல் பெற்றனர். அதில் ஒன்று தான் சம்பளம் பெற்றும் கால்ஷீட் வழங்காத நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என்ற முடிவை எடுத்து அவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்போவதாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுதான்... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் கோலிவுட்... உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்!
இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் கலக்கிய முதல் பாகம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததுடன், வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது. மேலும் படிக்க
நெகட்டிவ் விமர்சனம் இருக்கட்டும்.. 3 நாள்களில் ரூ.340 கோடின்னா சும்மாவா? ஷாக் கொடுக்கும் ஆதிபுருஷ்!
நெகட்டிவ் விமர்சனங்கள் தாண்டி ஆதிபுருஷ் திரைப்படம் மூன்று நாள்களில் 340 கோடிகள் வசூலை அள்ளியுள்ளது இந்தியத் திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், க்ரித்தி சனோன் சீதையாகவும், தேவதத் நாக் ஹனுமனாகவும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, 500 கோடிகளுக்கும் மேற்பட்ட செலவில் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
அடடே... லியோ படத்துல ‘நா ரெடி’ பாடலை பாடியது இவர்தானா? - இணையத்தில் வைரலாகும் தகவல்..!
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நா ரெடி’ பாடல் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது. விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் படிக்க
ஆதிபுருஷ் திரைப்பட வசனத்தால் சர்ச்சை... ஒட்டுமொத்த இந்திய படங்களுக்கும் தடை... எங்கு தெரியுமா?
வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ் . பிரபாஸ், சயீஃப் அலிகான், கீர்த்தி சனோன், உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் கடந்த 16-ம் தேதி இப்படம் வெளியானது. மேலும் படிக்க
‘சினிமாவை விட்டு போகப்போகிறேன்’ ... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவலால் அதிர்ச்சி..
சினிமாவில் நிறைய நாட்கள் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி பணியில் இருந்து சினிமா மேல் இருந்த காதலால் அந்த பணியை விட்டுவிட்டு திரையுலகிற்குள் நுழைந்தவர் ‘லோகேஷ் கனகராஜ்’. குறும்படங்கள் வாயிலாக கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ‘மாநகரம்’ படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மேலும் படிக்க
எத்தன படங்கள் வேணும்னாலும் எடுங்க.. டைட்டில் மட்டும் நல்லா வையுங்க.. மீண்டும் அஜித்-சிவா கூட்டணி..
வீரம் , வேதாளம் , விவேகம் , விஸ்வாசம், படத்தைத் தொடர்ந்து ஐந்தாவது முரையாக இணைகிறது அஜித் சிவா கூட்டணி. படத்தின் பெயர் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரு ஹிண்ட் தருகிறேன் படத்தின் பெயர் வி யில் தொடங்கி ம் இல் முடியும். சிவா மற்றும் அஜித்தின் கூட்டணி 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் தொடங்கியது. ஒரே சமயத்தில் அஜித் குமாரை மாஸாகவும் அதேநேரத்தில் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்த மாதிரியும் அமைந்தது இந்தப் படம். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

