Lokah OTT Release : லோகா ஓடிடி ரிலீஸ் பற்றி தவறான செய்தி..துல்கர் சல்மான் அதிரடி பதில்
லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாவது வந்த தகவல் உண்மையானதல்ல என்றும் ஓடிடியில் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றியும் துல்கர் சல்மான் விளக்கமளித்துள்ளார்.

துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான லோகா திரைப்படம் மலையாள சினிமாவில் வசூல் சாதனை படைத்துள்ளது. தெலுங்கு , தமிழ் , இந்தி ஆகிய பிற மொழிகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் பிற மாநிலங்களிலும் படத்தை டப் செய்து வெளியிட்டுள்ளார்கள். படத்தை திரையரங்கில் பார்க்க முடியாதவர்கள் லோகா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதிக்கு காத்திருக்கிறார்கள். கடந்த 25 நாட்களாக திரையரங்கில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் லோகா படம் ஓடிடியில் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகின. இந்த தகவல்கள் குறித்து படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் விளக்கமளித்துள்ளார்
லோகா ஓடிடி ரிலீஸ் குறிதுத் துல்கர் சல்மான்
தனது எக்ஸ் பக்கத்தில் " இப்போதைக்கு லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது. போலியான தகவல்களை நம்ப வேபாமல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருங்கள்" என துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார். மேலும் லோகா திரைப்படத்தை அதன் காட்சியமைப்புகள் மற்றும் பின்னணி இசையுடன் சேர்த்து திரையரங்கில் பார்ப்பது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும் என படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Lokah isn't coming to OTT anytime soon. Ignore the fake news and stay tuned for official announcements! #Lokah #WhatstheHurry
— Dulquer Salmaan (@dulQuer) September 21, 2025
லோகா வசூல்
கடந்த சில ஆண்டுகளில் மலையாள திரைப்படங்களுக்கு இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ஓடிடியில் வெளியாகும் மலையாள படங்களுக்கு வடமாநிலங்களிலும் ரசிகர்கள் பெருகியுள்ளார்கள். அந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளில் வெளியான மலையாள படங்கள் அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்து வருகின்றன. பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வசூலித்த முதல் மலையாள படமாக சாதனை படைத்தது. மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் உலகளவில் 260 கோடிக்கும் மேல் வசூலித்து அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்தது. தற்போது மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்து லோகா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலித்த லோகா உலகளவில் ரூ 275 கோடி வசூலித்துள்ளது. கூடிய விரைவில் 300 கோடி வசூலை படம் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















