தமிழ் சினிமாவின் முதல் நவரச நாயகன்.. கார்த்திக் இல்ல.. யார் தெரியுமா?
சினிமா மக்களின் பொழுதுபோக்கு விஷயம் என்றில்லாமல் அது உணர்வுகளுடன் கலந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் தியேட்டர்களும், திரைப்படங்களும், பிரபலங்களும் கொண்டாடப்படும் விஷயமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என அழைக்கப்படுபவர் கார்த்திக். ஆனால் அவருக்கு முன்னாள் அந்த பட்டத்துக்கு பிரபல நடிகர் ஒருவர் சொந்தக்காரராக இருந்துள்ளார்.அதனைப் பற்றி நாம் காணலாம்.
சினிமாவும் பட்டங்களும்
சினிமா மக்களின் பொழுதுபோக்கு விஷயம் என்றில்லாமல் அது உணர்வுகளுடன் கலந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் தியேட்டர்களும், திரைப்படங்களும், பிரபலங்களும் கொண்டாடப்படும் விஷயமாக உள்ளது. தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகள் தொடங்கி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் வரை அனைவரையும் அடைமொழியுடன் அழைக்கும் பழக்கம் ரசிகர்களிடத்தில் உள்ளது.
அந்த வகையில் நடிகர் திலகம், மக்கள் திலகம், வெள்ளிக்கிழமை நாயகன், காதல் மன்னன், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், புரட்சிக்கலைஞர், புரட்சித் தமிழன், டாப் ஸ்டார், தளபதி, தல, புரட்சி தளபதி, வைகைப்புயல், மக்கள் செல்வன், இளம் புயல், லேடி சூப்பர் ஸ்டார், இயக்குநர் சிகரம், இயக்குநர் இமயம், பிரமாண்ட இயக்குநர், இசைப்புயல், இசைஞானி, தேனிசைத் தென்றல், இசை வசந்தம் என ஒவ்வொரு பட்டங்களும் காலத்தால் மறக்க முடியாத மற்றும் அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
இது தமிழ் சினிமா மட்டுமல்லாது அனைத்து மொழி சினிமாவிலும் உள்ளவர்களுக்கும் பொருந்தக்கூடியது. இப்படியான நிலையில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் சமீபத்தில் தான் சினிமா கேரியரில் நடிகர் கார்த்திக்கால் சந்தித்த பிரச்னை குறித்து பேசினார். இதனால் பலரும் கார்த்திக் பற்றிய தகவல்களை தேடி வருகின்றனர்.
முதல் நவரச நாயகன் இவர்தானா?
இந்த நிலையில் 2000க்கும் முன்னால் பிறந்தவர்களுக்கு நிச்சயம் நடிகர் கார்த்திக் பற்றி தெரிந்திருக்கும். மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.பி.முத்துராமனின் மகனான கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல ஹிட் படங்களை கொடுத்தார். அவர் ரசிகர்களால் நவரச நாயகன் என அழைக்கப்பட்டார்.
ஆனால் உண்மையில் கார்த்திக்கிற்கு அப்படி அழைப்பது பிடிக்காது என சொல்லப்படுகிறது. காரணம் அன்றைய காலக்கட்டத்தில் சிவாஜிக்குப் பின் நடிப்பில் கமல்ஹாசன் பல்வேறு பரிணாமங்களை காட்டிக் கொண்டிருந்தார். அதனால் அவர் தான் நவரச நாயகன் என அழைக்கப்பட்டார். சிவாஜி கணேசன் சொந்த தயாரிப்பில் உருவான வெற்றி விழா படத்தின் டைட்டிலில் கமல் பெயருக்கு முன்னால் நவரச நாயகன் என்ற அடைமொழி இடம் பெற்றிருக்கும்.

இப்படியான நிலையில் இன்னொருவருக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை வைத்து தன்னுடைய பெயரை அழைக்க வேண்டாம் என கார்த்திக் நினைத்ததாக சொல்லப்படுகிறது. அவரிடம் போய் அந்த பெயரை சொன்னாலே டென்ஷன் ஆகி விடுவாராம். தன்னை கார்த்திக் என அழைத்தால் போதும் என சினிமா வட்டாரத்தில் கூறுவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.





















