இயக்குநராக அனுபவம் தேவையா? அறிவு தேவையா? - பிரஷாந்த் கேள்விக்கு பதில் சொன்ன வெற்றிமாறன், கார்த்தி சுப்புராஜ், லோகேஷ்..!
சினிமாவில் இயக்குநராவது குறித்து நடிகர் பிரசாந்த் எழுப்பிய கேள்விக்கு இயக்குநர்கள் வெற்றிமாறன்,கார்த்திக் சுப்புராஜ் லோகேஷ் கனகராஜ் பதிலளித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் இயக்குநராவது குறித்து நடிகர் பிரசாந்த் எழுப்பிய கேள்விக்கு இயக்குநர்கள் வெற்றிமாறன்,கார்த்திக் சுப்புராஜ் லோகேஷ் கனகராஜ் பதிலளித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டத்தில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவ்வப்போது படங்களில் நடித்த அவர் தற்போது மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அடுத்ததாக பிரசாந்த் நடிப்பில், அந்தகன் படம் வெளியாகவுள்ளது. தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதேபோல் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த மாஸ்டர், கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள அவர் “லியோ” என்ற படத்தை இயக்கி வருகிறார். யாரிடமும் உதவி இயக்குநராக வேலை செய்யாத லோகேஷ், சில படங்களிலேயே இந்தளவுக்கு முன்னணியில் உயர்ந்திருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் பிரசாந்த் இயக்குநர் லோகேஷிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது, “சினிமாவில் இயக்குநராக அனுபவம் முக்கியமா அல்லது கற்றுக் கொள்வது முக்கியமா” என்ற கேள்வியை கேட்டார். சிலர் 10, 12 ஆண்டுகள் உதவி இயக்குநராக இருக்கிறார்கள். சிலர் படங்களை பார்த்துவிட்டு நானும் படம் இயக்குகிறேன் என நம்பிக்கையோடு வருகிறார்கள். இதில் எது முக்கியம்" என்ற கேள்வியை எழுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறன் தெரிவிக்கும் போது, நாங்கள் யாரையெல்லாம் பார்த்து இயக்குநராக வேண்டும் என நினைத்தோமே அவர்கள் யாருமே உதவி இயக்குநராக இருந்ததில்லை. பாலுமகேந்திரா, பாலசந்தர், மணிரத்னம், மகேந்திரன் உள்ளிட்டோர் உதவி இயக்குநராக பணியாற்றாமல் தங்கள் துறையில் தன்னெழுச்சியாக உயர்ந்தனர். உதவி இயக்குநராக இருப்பதில் பிளஸ் என்னவென்றால், மத்தவங்க பண்ற தப்புகளில் இருந்து நாம கத்துக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும் போது, இயக்குநராக முடிவு செய்தபோது என்ன பண்ண வேண்டும் என தெரியவில்லை. வெற்றிமாறன் சொல்வது போன்று யாரெல்லாம் உதவி இயக்குநராக இருக்காமல் இயக்குநராக வெற்றி பெற்றவர்கள் என்ற விவரங்களை லிஸ்ட் எடுத்தேன். அதேசமயம் திரைப்பட நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள், குறும்படம் இயக்குவதில் வெற்றி பெற்றவர்கள் என லிஸ்ட் பெருசா போனதும் எனக்கு குழப்பமா இருந்தது. எனக்கு நம்முடைய குழு நம்புறதும், உத்வேகம் கொடுக்குறதும் தான் படம் எடுக்க முடிவெடுக்க வைக்கும்.
இதேபோல் மேலே லோகேஷ் சொன்ன 3 வழிகளிலும் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.