Vignesh Shivan :தந்தையாக இருப்பது எப்படியானது? ஓவியத்தைப் பார்த்து எமோஷ்னலாகிய விக்னேஷ் சிவன்...
தனது வீட்டில் மாட்டப்பட்ட ஓவியம் ஒன்றைப் பார்த்து தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஷிவன்
விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது எல்.ஐ.சி என்கிற படத்தை இயக்கி வருகிறார். பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க க்ரித்தி ஷெட்டி நாயகியாக இப்படத்தில் நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடும்பத்துடன் ஊர் சுற்றுவதாக குற்றச்சாட்டு
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படம் தவிர்த்து அவர் இயக்கிய படங்கள் பெரியளவில் வெற்றிபெறவில்லை. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் கமிட் ஆனார். பின் தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் இந்த படம் அவை கையை விட்டுப்போனது. இதை சகஜமாக எடுத்துக்கொண்டு தனது அடுத்த படத்தை எடுத்து வருகிறார். சினிமா தவிர்த்து தனது மனைவி நயன்தாரா மற்றும் இரு மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் மேல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
விக்னேஷ் சிவன் தனது பட வேலைகளை விட்டுவிட்டு தனது குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுலா சென்றுள்ளார். அவரது இந்த நடத்தையால்தான் அஜித் படம் அவர் கையை விட்டுப் போனதாக ஊடகவியலாளர் அந்தணன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
ஓவியத்திற்கு தந்தையர் தின வாழ்த்து
தன் மீது எழுப்பப்படும் தேவையில்லாத விமர்சனங்களுக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சினிமா மற்றும் குடும்பத்தை சம அளவில் பேலன்ஸ் செய்து வருகிறார் விக்கி. சமீபத்தில் தந்தை தினத்தை தனது இரு மகன்களோடு உற்சாகமாக கொண்டாடினார். மேலும் தனது வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றுக்கு முதற்கொண்டு அவர் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வீட்டில் மாட்டப்பட்டுள்ள இந்திய மகாராஜா ஒருவரின் ஓவியத்தைப் பார்த்து "தந்தையர் தின வாழ்த்துக்கள். நீங்கள் யாருடைய தந்தை என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் உங்களை எங்கள் புது அறையில் பார்ப்பதற்கு ரொம்பவும் எமோஷனலாக இருந்தது." என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.