Rathnakumar : இவரு மொரட்டு விஜய் ரசிகராச்சே...வேட்டையன் படத்தை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் பற்றி மேயாதமான் இயக்குநர் ரத்னகுமாரின் எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 வெளியானது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி , ரக்ஷன் , கிஷோர் , அபிராமி , ரோகிணி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வேட்டையனுக்கு எதிராக கிளம்பிய விஜய் ரசிகர்கள்
வேட்டையன் படம் ரிலீஸான முதல் நாளில் இருந்தே விஜய் ரசிகர்கள் இப்படத்திற்கு எதிராக இருந்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் படத்திற்கு எதிரான நெகட்டிவ் ப்ரோமோஷன்கள் படு தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் படம் வெகுஜன ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டது போல இல்லாமல் படத்தின் வசூலும் இதுவரை சிறப்பகாவே இருந்துள்ளது. இருந்தும் விஜய் ரசிகர்கள் ஓய்ந்தபாடில்லை. தனிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு முழுமூச்சாக நெகட்டிவிட்டியை பரப்பி வருகிறார்கள். இது ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற தரப்பினரையும் கோபபடுத்தி இருக்கிறது. இந்நிலையில் தீவிர விஜய் ரசிகரான மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் வேட்டையன் படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வேட்டையன் படத்தை நடிகர் விஜய் ரசித்து பார்த்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
வேட்டையன் படத்தை பாராட்டிய இயக்குநர் ரத்னகுமார்
தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் ரத்னகுமார் வேட்டையன் படத்தைப் பற்றி இப்படி கூறியிருக்கிறார் " வேட்டையன் மிக அவசியமான முக்கியமான ஒரு படம். விறுவிறுப்பான முதல் பாதி , கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இரண்டாம் பாதி இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கான தருணங்கள் என இந்த படத்தை நான் ரொம்ப எஞ்சாய் செய்தேன். ரஜினியின் கரியரில் இது ஒரு முக்கியமான கதாபாத்திரம். வழக்கம் போல அவர் அதை அசால்ட்டாக நடித்திருக்கிறார். ஞானவேல் சார் இந்த கதையை நீங்கள் என்னிடம் சில ஆண்டுகளுக்கு முன் படிக்க கொடுத்தபோது எப்படி கமர்ஷியல் ரீதியான சமரசம் இல்லாமல் எப்படி இந்த படத்தை நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் என நினைத்தேன். ஆனான் நீங்கள் ரொம்ப சிறப்பாக அதை செய்திருக்கிறீர். படம் தொடக்கம் முதல் இறுதிவை எங்கேஜிங்காகவும் என்டர்டெயினிங்காகவும் இருந்தது.
#Vettaiyan is much needed & most Important film 👏👍. Really liked the whodunit kind of gripping first half & content driven second half with handfull of Theater moments.
— Rathna kumar (@MrRathna) October 15, 2024
This is one interesting character in entire superstar carrier. As always @rajinikanth sir effortlessly… pic.twitter.com/XYdgQCR4HY
ஃபகத் ஃபாசில் இந்த படத்தில் நடித்தது தப்பான முடிவோ என்று எனக்கு முதலில் தோன்றியது. நான் கதை படித்தபோது அந்த கதாபாத்திரத்தில் யோகிபாபுவை கற்பனை செய்தேன். ஆனால் அந்த மனிதர் திரையில் மிரட்டிவிட்டார். ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய ஸ்டார் படம் ஆனால் வழக்கமான கதையாக இல்லாமல் இருந்ததை பார்க்க ரொம்ப புத்துணர்வாக இருந்தது" என ரத்னகுமார் தெரிவித்துள்ளார்