மேலும் அறிய

Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் உருவாக காரணமான புத்தகம்.. ரகசியத்தை சொன்ன ராஜ்குமார் பெரியசாமி!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அமரன்”. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.

அமரன் படத்தை தான் இயக்க என்ன காரணம் என்பதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி  இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அமரன்”. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. 

இதனிடையே அமரன் படம் உருவானது எப்படி என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், “ரங்கூன் படத்துக்கு பிறகு நான் வேறொரு கதை பண்ணியிருந்தேன். எதாவது இங்கு நடந்தால் தான் நிச்சயம். அது கதை வகையில் மிகப்பெரிய படம். கிட்டதட்ட முன்னேற்பாடு பணிகள் எல்லாம் முடிந்து ஷூட்டிங் போகும் சமயத்தில் நடிப்பவர்களிடையே தேதி பிரச்சினை என்பது வந்தது. அதனால் அந்த நேரம் எடுக்க முடியவில்லை. கொரோனா ஊரடங்கு முன்னால் மற்றும் பின்னால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் வீணாகி விட்டது.

ரங்கூன் படம் ரிலீசாகி கிட்டதட்ட அடுத்த 3 மாதத்திற்குள் அப்படம் கமிட்டானேன். மிகப்பெரிய பட்ஜெட் என்ற போதிலும் விரைவில் அந்த படம் உருவாகும். அதைப்பற்றி ஆரம்பத்தில் செய்திகள் வந்தது. அந்த படத்தால் தான் இவ்வளவு தாமதம் என்பது ஏற்பட்டது. என்னை பொறுத்தவரையில் காத்திருப்பது கூட படம் உருவாவதற்கான நேரம் என்று தான் நினைப்பேன். எனக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது, அடுத்த படம் பற்றி பார்க்கிறவர்கள், கேட்கிறவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது தான் பெரிய டாஸ்க் ஆக இருக்கும். 

பிக்பாஸ் நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கும்போது ஒருநாள் கமல்ஹாசன் என்னிடம், நீங்கள் ஏற்கனவே படம் பண்ணியிருக்கிறீர்கள் அல்லவா, ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என சொன்னார். ராஜ்கமல் ஆபீஸில் அதற்கென ஒரு குழு உள்ளது. நான் மகேந்திரன் சாரிடம் அமரன் கதையோ, முன்னாடி சொன்ன கதையோ அல்லாமல் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. அதன்பிறகு வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வரவழைத்து கதை சொல்ல சொன்னார். நானும் சொன்னேன். அவர்கள் உடனடியாக கமலுக்கு போன் செய்து இந்த கதையை பண்ணலாம் என சொன்னார்கள். 

பொருட்செலவா ரூ.4 கோடியில் எடுக்கக்கூடிய படம் தான். ஆனால் உணர்வுகளை வேட்டையாடும் அளவுக்கு உண்மை சம்பவம் தான்.நான் அதைத்தான் செய்யப் போகிறேன் என வேலையெல்லாம் சென்று கொண்டிருக்கிறது.

அமரன் உருவான கதை

அப்போது எனக்கு மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவர் போன் செய்து "India's Most fearless" என்ற புக் இருக்கிறது. அதில் தற்போது 4 பாகங்கள் வந்து விட்டது. அதன் ஒவ்வொரு புத்தகமும் 15 ஹீரோக்களுக்கு சமர்பிக்கப்பட்டு இருக்கும். அதில் போர்முனை, இந்திய பாதுகாப்புத்துறையில் இருப்பவர்களின் வீரதீர செயல்களை பதிவு பண்ணிய தகவல்கள் இருக்கும். 

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பற்றி  2 தகவல்கள் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நான் முதலில் மேஜர் சரவணனாக இருக்கும் எண்ணினேன். இருந்தாலும் யாருன்னு என் நண்பரிடம் கேட்டேன். பின்னர் நீண்ட யோசனைக்குப் பின் மேஜர் முகுந்த் வரதராஜனா? என நானே திரும்ப கேட்டேன். அவர் சரியாக சொல்லிட்டிங்க என பதிலளித்தார்.  நான் டிவியில் மேஜர் முகுந்த் மரணம் பற்றியும், வாழ்க்கை வரலாறு பற்றியும் பார்த்தேன்.

மேலும் மேஜர் முகுந்தின் இறுதிச்சடங்கில் அவரின் மகள் செய்த விஷயம் யாராலும் மறக்க முடியாது. நான் அந்த புத்தகத்தை படித்தேன். சோனி நிறுவனம் இதில் ஒரு சாப்டரை படமாக்க இருப்பதாக சொன்னார்கள். 

ஆனால் நான் ஏற்கனவே கமிட்டான படம் பற்றி என் நண்பரிடம் சொன்னேன். மேலும் புத்தகம் மட்டும் வைத்து படம் பண்ண முடியாது என்பதால் தகவல்கள் வேண்டும் என நினைத்தேன். பின்னர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜனிடம் பேசினேன். அதன் பிறகு சிலரிடம் பேசி காஷ்மீரில் அவரின் 2 ஆபரேஷன்கள் பற்றி கேட்டறிந்தேன். முகுந்த் குடும்பத்தினரிடம் பேசிய போது வேறு வித தகவல்கள் கிடைத்தது. ஆனால் இவை எதுவும் திரைக்கதையாக வரவில்லை. இதை அனைத்தையும் பேப்பரில் எழுதி வைத்தேன்.

பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த மேஜர் முகுந்தின் மனைவியை சந்தித்தேன். அந்த சந்திப்பு 6,7 மணி நேரம் சென்றது. அப்போது தான் இந்த வாழ்க்கை பயணத்தில் ஒரு ஆன்மா உள்ளது தெரிந்தது. அப்படியாக அமரன் படத்தின் கதை உருவாக காரணம் அமைந்தது” என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Embed widget