Vijay: விஜய்யை வாடா போடானு சொல்றதுக்கு இவங்கதான் சரி.. பேரரசு சொல்லும் நடிகை யார்?
நடிகர் விஜய் நடித்துள்ள திருப்பாச்சி படத்தில் அவரை வாடா போடா என்று அழைக்கும் காட்சிக்காக த்ரிஷாவிற்கு முன்பு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ததாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். கில்லி திரைப்படத்திற்கு பிறகு இவரது திருப்பாச்சி படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ஆகும். விஜய்க்கு பெண்கள், குடும்பங்கள் ரசிகர்களை அதிகளவில் உருவாக்கிய திரைப்படத்தில் திருப்பாச்சி முக்கியமான படம் ஆகும்.
திருப்பாச்சி:
திருப்பாச்சி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான பேரரசுவிற்கும் இந்த படம் அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார். ஆனால், திருப்பாச்சி படத்தில் முதன்முதலில் ஜோடியாக நடிக்கத் தேர்வானவர் த்ரிஷா கிடையாது.
த்ரிஷா இல்ல அசின்:
இதுதொடர்பாக, இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, முதலில் த்ரிஷா எனக்கு ஐடியா இல்ல. நம்ம கதை ஓகே ஆகுறதுதானே. முதலில் விஜய்யே ஐடியா இல்ல. விஜய் ஓகே ஆன பிறகுதான் அப்புறம் யார்?யார்? நடிகர்கள் என்று போகும்போது நான் முதலில் தேர்வு செய்தது அசின்தான்.

இந்த கேரக்டருக்கு அசின் சரியாக இருப்பார் என்று தோன்றியது. அசின் முடிவு பண்ணி விஜய் சார் ஓகே சொல்லிட்டாரு, சவுத்ரி சார் ஓகே சொல்லிட்டாரு. அசின்கிட்ட அவங்க ஃபோர்ஷன் எல்லாம் கதை சொல்லிட்டேன். அவங்களுக்கும் ஓகே. விஜய் படம் என்பதால் அவங்களுக்கும் ஓகே.
வாடா, போடா:
ஏற்கனவே சன் ஆஃப் மகாலட்சுமி பண்ணிருந்தாங்க. எனக்கு சன் ஆஃப் மகாலட்சுமி படம் பார்த்து பிடிபடல. தெலுங்குல நாகர்ஜுனாவோடு படம் பண்ணிருப்பாங்க. அதுல சில சீன்ல நாகர்ஜுனாவை தூக்கி சாப்பிட்ருப்பாங்க. போன் நம்பர்லா கொடுத்து ஒரு படம் இருக்கும். போலீஸா இருப்பாரு. மக்களுக்கு அவர் நம்பர் கொடுத்துடுவாரு. அந்த நம்பர்ல இந்த அம்மா போன் பண்ணி கலாய்க்கும்.

அந்த சுறுசுறுப்பு போல்ட்னஸ் எல்லாம் பிடிச்சுருச்சு. அப்போ இந்த கேரக்டருக்கு கரெக்டா இருக்கும். விஜய்யையே சில இடத்துல ஏ வாடா, போடானு எல்லாம் பண்ணனும்ல. இவங்கதான் சரியான ஆள்னு சொன்னேன். கதை பிடிச்சுருச்சு அவங்களுக்கு. நாங்க அம்மன் கோயில், தங்கச்சி வீடுனு செட் போட்டாச்சு. இப்போ அந்த தேதி கிளாஸ் ஆகிப்போச்சு.
அவங்க தெலுங்கு படத்துல இருந்தாங்க. வரதுக்கு ஒரு மாசம் ஆகும்னு சொன்னாங்க. செட் போட்டு வெயிட் பண்ண முடியாது. அப்புறம்தான் த்ரிஷா கேட்டுப் பாப்போம்னு கேட்டோம். கால்ஷீட் பிரச்சினையாலதான் த்ரிஷாவை கேட்டோம்.
இவ்வாறு அவர் கூறியிருப்பார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி:
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் விஜய், த்ரிஷா, மல்லிகா, பசுபதி, கோட்டா சீனிவாசராவ் என பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். காமெடி, ஆக்ஷன் என குடும்ப படமாக இந்த படம் உருவாகியிருக்கும். இந்த படத்தில் விஜய் - த்ரிஷா காதல் காட்சிக்கு முந்தைய காமெடி காட்சிகளும் அசத்தலாக இருக்கும்.
இந்த படத்திற்கு தீனா இசையமைத்திருப்பார். கட்டு கட்டு பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும், கண்ணும் கண்ணும்தான் பாடலுக்கு மணிசர்மாவும் இசையமைத்திருப்பார்கள். விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இதற்கு அடுத்து பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த சிவகாசி படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.





















