Chandramukhi 2: காணாமல் போன 480 ஷாட்கள்.. ஷாக்கான சந்திரமுகி 2 படக்குழு.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குநர் பி.வாசு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

சந்திரமுகி 2 (Chandramukhi 2) படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது குறித்து அப்படத்தின் இயக்குநர் பி.வாசு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
சந்திரமுகி - சந்திரமுகி 2
கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, நாசர், வினீத், மாளவிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனுசூட் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த இப்படம் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் கொண்டுள்ளது. இதனிடையே நீண்ட வருடங்களாகவே இப்படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
அது 17 ஆண்டுகள் கழித்து சாத்தியமாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பி.வாசு ‘சந்திரமுகி’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். மரகதமணி இசையமைத்துள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா,லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம்
இதனிடையே முதல் பாகத்தில் சொல்லாமல் சொல்லப்பட்ட சந்திரமுகி கேரக்டரை மையமாக கொண்டு 2ஆம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சந்திரமுகியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். படத்தின் பாடல்களும், 2 ட்ரெய்லர்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் முதல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் ப்ரோமோஷன் எல்லாம் விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. போஸ்ட் புரொடக்ஷனில் சிஜி காட்சிகளில் ஏற்பட்ட காலதாமதம் தான் காரணம் என லைகா நிறுவனம் விளக்கமளித்தது.
உண்மையை போட்டுடைத்த பி.வாசு
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் தெலுங்கு ரிலீஸ் புரோமோஷனுக்காக படக்குழுவினர் ஹைதராபாத் சென்றுள்ளனர். அப்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது குறித்து இயக்குநர் வாசு பதிலளித்தார்.செப்டம்பர் 15 ஆம் தேதி படம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி இறுதி பிரதியை பார்க்க தான் விரும்பியதாகவும், ஆனால் அன்றைய தினம் 480 ஷாட்கள் காணவில்லை என்று படக்குழுவினரிடம் இருந்து போன் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘அந்த காட்சிகளை திரும்ப பெற 150க்கும் மேற்பட்ட டெக்னீஷியன்கள் 4,5 நாட்களாக போராடி மீட்டனர். நான் இப்படியெல்லாம் நடக்குமா? என நினைத்துக் கொண்டேன்.ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது’ என பி.வாசு கூறியுள்ளார். ஆனால் பிற படங்களில் போட்டி காரணமாக சந்திரமுகி 2 படத்தின் தள்ளிப்போகவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே இயக்குநர் பி.வாசு சொல்வது நம்பும்படி இல்லை என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Chandramukhi 2: ‘சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதான்’ .. சுவாரஸ்யமான தகவல்களை சொன்ன இயக்குநர் பி.வாசு..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

