1000 Crore Club Movies: கல்லா கட்டும் இந்திய சினிமா... இதுவரை ரூ.1,000 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன தெரியுமா?
1000 Crore Club Movies: இந்திய சினிமாவில் ரூ.1,000 கோடி வசூலைப் பெற்று சாதனைப் படைத்த படங்கள் என்னென்ன என்பது காணலாம்.
1000 Crore Club Movies List: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான்(Jawan) திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை கடந்துள்ளதாக தன் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டெர்டெயின்மெண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தகைய சாதனையை ஜவான் படம் எட்டும் பட்சத்தில் அப்படத்தின் இயக்குநர் அட்லீ, “தமிழ் சினிமாவில் ரூ.1,000 வசூல் சாதனை படைத்த இயக்குநர்” என்ற சிறப்பை பெறுவார். இந்நிலையில் இதுவரை இந்திய சினிமாவில் ரூ.1,000 கோடி வசூல் இலக்கை எட்டிய இந்தியத் திரைப்படங்களின் வரிசையைப் பார்க்கலாம்
தங்கல்
கடந்த 2016 ஆம் வருடம் அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் தான் அதிக வசூல் ஈட்டிய இந்தியப் படங்களின் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் , ஃபாதிமா சானா, சான்யா மல்ஹோத்ரான் உள்ளிட்டவர்கள் நடித்த தங்கல் திரைப்படம் இந்தியாவில் ரூ 587 கோடிகளும் நம்பமுடியாத வகையில் பிற நாடுகளில் ரூ 1575 கோடிகளையும் வசூல் என உலகம் முழுவதும் மொத்தம் ரூ 2024 கோடிகளை வசூல் செய்தது. நடிகர் அமீர் கானை ரெக்கார்ட் பிரேக்கர் என்று சொல்வது சும்மா இல்லை.
பாகுபலி 2
எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் வருடம் வெளியான பாகுபலி 2 இந்த வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை. முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. உலகம் முழுவதிலும் மொத்தம் ரூ 1,810 கோடிகளை வசூல் செய்தது பாகுபலி 2 படம்.
ஆர்.ஆர்.ஆர்
ராஜமெளலி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர் ஆர் திரைப்படத்திற்கு பிற நாடுகளில் கிடைத்த வரவேற்பு வேறு எந்த இந்தியப் படத்திற்கும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். படத்தை விட படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் நடனத்திற்கும் உலகம் முழுவதிலும் ரசிகர்கள் திரண்டார்கள். மேலும் ஆஸ்கர் மற்றும் கோல்டன் க்ளோப் ஆகிய இரண்டு சர்வதேச விருதுகளை வென்றது இந்தப் பாடல். உலகளவில் ரூ 1,258 கோடி வசூல் செய்தது ஆர்.ஆர். ஆர். திரைப்படம்
கே.ஜி.எஃப் 2
அதே 2022 ஆம் வருடம் வெளியான கன்னடத் திரைப்படம் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் ஆர்.ஆர் ஆர். படத்திற்கு நிகராக ரூ1,250 கோடி வசூல் செய்து இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பதான்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் வெளியாகியத் திரைப்படம் பதான். ஷாருக் கான், தீபிகா படூகோன், சல்மான் கான், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டவர்கள் நடித்து சித்தார்த்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கினார். சுமார் ரூ 225 கோடி செலவில் எடுக்கப்பட்ட பதான் திரைப்படம் உலகம் முழுவது மொத்தம் ரூ 1000 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது. ஷாருக் கான் நடித்து அதிக வசூல் ஈட்டியப் படங்களில் முதலிடத்தையும் பிடித்தது.
தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளது ஜவான் திரைப்படம். இரண்டு முறை 1000 கோடிகள் வசூல் செய்த ஒரே இந்திய நடிகர் ஷாருக் கான் மட்டும் தான் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்..!
மேலும் படிக்க: ரூ.1,000 கோடி வசூலை கடந்த ஜவான்.. முதல் படத்திலேயே தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த அட்லீ..!