மேலும் அறிய
Advertisement
Lokesh Kanagaraj: LCU-ன் ”ஜி ஸ்குவாட் ...” 5 படங்களை மட்டுமே இயக்கி தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj Production House: லோகேஷ் கனகராஜ் “ஜி ஸ்குவாட்’ (GSquad) ” என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “ஜி ஸ்குவாட்’ (GSquad) ” என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 5 படங்களை இயக்கிய பின்னர் புதிய தயாரிப்பு நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், கதை சொல்லியின் புதிய முயற்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் தனது தயாரிப்பு நிறுவனத்தை அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது நிறுவனத்தில் முதல் தயாரிப்புகள் தனதுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தனக்கு அளித்த ஆதரவு அளித்தது, இனி வரவுள்ள படைப்புகளுக்கும் வாங்க வேண்டும் என்ற லோகேஷ் கனகராஜ், தனது முதல் தயாரிப்பின் அப்டேட்டிற்காக காத்திருங்கள் என்றும் கூறியுள்ளார்.
Need all your love and support 🤗❤️@GSquadOffl pic.twitter.com/9NWou59tuE
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 27, 2023
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த லியோ படம் வசூலில் சாதனை படத்தது. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் என பலர் நடித்திருந்த லியோ படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. லியோ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி, கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தன. ஒரு படத்தின் கதை அடுத்த படத்தோடு தொடர்பில் இருப்பதால், லோகேஷ் கனகராஜின் படங்கள் எல்.சி.யூ. கூட்டணி என அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க: Paruthiveeran: ஞானவேல்ராஜா மீது வலுக்கும் எதிர்ப்பு.. அமீருக்கு நன்றி தெரிவித்த கார்த்தி, சூர்யா.. குழம்பும் ரசிகர்கள்..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion