Maaran movie : மாறனை அடித்துத் துவைக்கும் ரசிகர்கள்! இன்ஸ்டாவில் புரியாத விடையளித்த கார்த்திக் நரேன்!
“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து இருந்தனர்.
![Maaran movie : மாறனை அடித்துத் துவைக்கும் ரசிகர்கள்! இன்ஸ்டாவில் புரியாத விடையளித்த கார்த்திக் நரேன்! director karthick naren controversial comment on maaran movie Maaran movie : மாறனை அடித்துத் துவைக்கும் ரசிகர்கள்! இன்ஸ்டாவில் புரியாத விடையளித்த கார்த்திக் நரேன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/13/38b604813f020dfa6c08e187cfbb07b5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்”. இந்தப்படத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிரெய்லரை ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டனர். ட்ரெய்லர் என்னவோ ஆர்வமாகத்தான் இருந்தது. ஆனால் படம் ரிலீஸுக்கு பிறகு ஆர்வமெல்லாம் குறைந்துவிட்டது.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிதாக திருப்தி அளிக்கவில்லை. மேலும், நெட்டிசன்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மாறன் படத்தை கலாய்த்து வருகின்றனர். எப்பொழுது நல்ல கதையை தேர்ந்தெடுக்கும் தனுஷ் எப்படி இந்த கதையை தேர்வு செய்தார். துருவங்கள் பதினாறு படம் எடுத்த கார்த்திக் நரேன், ஏன் இப்படி ஒரு படத்தை எடுத்தார் என்றும் கேள்வி எழுப்பினர். கதாநாயகி மாளவிகா மோகனின் நடிப்பை அடித்து துவைத்தனர் ஃபேன்ஸ்.
மாறன் திரைப்படத்திற்கு ஒரு பாசிட்டிவ் ரிப்ளை கூட வரவில்லை என்ற காரணத்தினால் படக்குழு எதாவது ஒரு தகவல் தெரிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ரைட்டு, உண்மைய அப்புறம் சொல்றேன்" என்று தெரிவித்திருந்தார்.
என்ன காரணத்திற்காக இந்த பதிவை வெளியிட்டார்..? யார் கேள்விக்கான பதில் இது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பிபோய் வருகின்றனர்.
“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து இருந்தனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேற்று முன்தினம் வெளியாகியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)