மேலும் அறிய

Director E Ramadoss: பிரபல திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்!

பிரபல திரைப்பட இயக்குநர் இ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல திரைப்பட இயக்குநர் இ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சினிமா அறிமுகம் 

விழுப்புரத்தைச் சேர்ந்த இ.ராமதாஸ் கல்லூரியில் படித்த காலத்தில் திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்து சினிமாவில் பணிபுரிய முயற்சித்துள்ளார். நடிகர் மனோபாலா மூலம் திரையுலக பிரபலங்கள் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு வெளியான கரடி என்னும் படத்துல் பாடலாசிரியராக இ.ராமதாஸ் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளிவரவே இல்லை. பின்னர் இயக்குநர் பி.எஸ்.நிவாஸின் “எனக்காக காத்திரு” படத்தில் திரைக்கதை எழுதினார். அதனைத் தொடர்ந்து சுமார் 6 படங்களில் இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 

அதன்மூலம் கிடைத்த தொடர்பை கொண்டு 1986 ஆம் ஆண்டு மோகன், சீதா நடித்த ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்னும் படத்தின் மூலம் ராமதாஸ் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து ‘ராஜா ராஜா தான்’, ‘ராவணன்’,‘வாழ்க ஜனநாயகம்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

கின்னஸ் சாதனை படத்தில் பங்கு 

தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட  கின்னஸ் சாதனைப் படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘சுயம் வரம்’ படத்தை இயக்கிய 9 இயக்குநர்களில் ஒருவராக ராமதாஸ் பணியாற்றியிருந்தார். இதில் பாண்டியராஜன், கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் இயக்கியிருந்தார். திரைக்கதை ஆசிரியராக பொன் விலங்கு, ராஜாளி, அந்தப்புரம், கண்ணாத்தாள், எதிரும் புதிரும், சங்கமம், கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். 

நடிகராக அறிமுகம் 

2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமதாஸ் தொடர்ந்து யுத்தம் செய், குக்கூ, காக்கி சட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, விசாரணை, மெட்ரோ, தர்மதுரை, ஒருநாள் கூத்து, விக்ரம் வேதா, அறம், கோலிசோடா 2, மாரி 2 ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பரீட்சையமானார்.

மாரடைப்பால் மரணம் 

இந்நிலையில் தனது தந்தையும், எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான இ.ராமதாஸ் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதை அவரது மகன் கலைச்செல்வன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராமதாஸ் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?
Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Embed widget