விடாமுயற்சி பட நிலை என்ன ?150 கோடி நஷ்ட ஈடில் சிக்கியது உண்மையா ?
விடாமுயற்சி படக்குழுவிடம் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியதாக வெளியாகிய தகவலை தயாரிப்பாளர் தனஞ்சயம் மறுத்துள்ளார்
விடாமுயற்சி
மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. டீசர் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் இப்படம் ஹாலிவுட் ரீமேக் என இணையத்தில் தகவல் வெளியாகியது. 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக் டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் கதை தான் விடாமுயற்சி என்றும் இப்படக்குழுவிடம் அதிகாரப்பூர்வமாக உரிமம் வாங்காமல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமெளண்ட் பிக்ச்சர்ஸ் விடாமுயற்சி படக்குழுவிடன் 150 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் பல தகவல்கள் வெளியாகின. இதனால் விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு வெளியாகுமா ஆகாதா என்கிற குழப்பம் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
150 கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டது உண்மையா , விடாமுயற்சி படம் உண்மையில் ரீமேக் படமா , படம் ஜனவரியில் வெளியாகுமா என்கிற கேள்விகளுக்கு தயாரிப்பாளர் தனஞ்சயன் பதிலளித்துள்ளார்.
150 கோடி நஷ்ட ஈடு உண்மையா
" இந்த தகவல் வெளியானதும் தான் லைகா நிறுவத்திற்கு ஃபோன் செய்து பேசினேன் பிரேக்டவுன் படத்தின் இன்ஸ்பிரேஷனில் விடாமுயற்சி படம் தொடங்கப்பட்டது உண்மைதான். இவ்வளவு பெரிய படத்தை எடுக்கும் லைகா ப்ரோடக்ஷன்ஸ் உரிமம் வாங்காமலா இருக்கும். 3 மாதங்களுக்கு முன்பாகவே விடாமுயற்சி படத்திற்கு அதிகாரப்பூர்வமாக ரைட்ஸ் வாங்கிவிட்டார்கள். இன்னும் ஆறு நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கிறது. ஹைதராபாதில் சில காட்சிகளும் , தாய்லாந்தில் ஒரு பாடல் காட்சியும் எடுக்க இருக்கிறார்கள். ஏற்கனவே 60 சதவீதம் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டன. வரும் ஜனவரி 10 ஆம் தேதி படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று லைகா தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரியான நேரத்தில் இப்படி ஒரு தகவலை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. விடாமுயற்சி நிச்சயம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும்" என தனஞ்சயன் தெரிவித்துள்ளார்.
#VidaaMuyarchi started as an Inspiration of Breakdown film & has some similar scenes. Lyca has bought the rights of the film before 3 Months itself. No issues revolves around the film related to rights🤝
— AmuthaBharathi (@CinemaWithAB) December 8, 2024
On track for Jan 10th release 💥pic.twitter.com/lba3p4TjCp