ஓடிடியில் வெளியாகிறது சித்திரை செவ்வானம் திரைப்படம்!
சித்திரைச் செவ்வானம் திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அப்பா - மகள் பாசப் பின்னணியில் உருவாகியுள்ளது 'சித்திரை செவ்வானம்' படம். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைட்து இயக்குநர் ஏ.எல்.விஜய் கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா இயக்கியுள்ளார்.
இதற்கான பிரத்யேக போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சண்டை இயக்குநராகப் பல படங்களில் பணிபுரிந்த ஸ்டன்ட் சில்வா இப்படத்தில் அறிமுக இயக்குநராகக் களமிறங்கி இருப்பதும், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கதாநாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமுத்திரகனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
1st Look of #ChithiraiSevvaanam Directed by my dear friend @silvastunt, Wishes to him for Venturing in KTown as a Director
— Dhanush (@dhanushkraja) November 21, 2021
Starring @thondankani @rimarajan #PoojaKannan
Presented by Dir #Vijay@Vairamuthu @SamCSmusic
A #Zee5 @ZEE5Tamil Exclusive film Premieres on Dec 3👆🏻 pic.twitter.com/TR7IBT1GSL
இப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறுகையில், '‘சித்திரைச் செவ்வானம்’ ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா, பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்னைகள்தான் கதை.
இப்படி மனதை உருக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஷூட்டிங் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார். இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. இது நம் சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்" என்றார்.
இந்நிலையில் சித்திரை செவ்வானம் திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்