மேலும் அறிய
Advertisement
Captain Miller: நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும் - மிரட்டும் கேப்டன் மில்லர் பாடல் வரிகள்
” நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்...படையாய் வந்தால் சவமலை குவியும்” என வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
Captain Miller First single: ”நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்... படையாய் வந்தால் சவமலை குவியும்” என வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரிகள் அதிரடி காட்டியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. தனுஷின் 50 வது படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1930-40 கால கட்டத்தில் விடுதலைக்காக போராடும் சாதாரண மனிதனின் வாழ்க்கையை கூறும் பீரியட் ஜானர் கதையாக கேப்டன் மில்லர் உள்ளது.
கேப்டன் மில்லரில் தனுஷ் மூன்று கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் ரிலீசாவதை ஒட்டி கேப்டன் மில்லரின் ஃபர்ஸ் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், கேபர் வாசுகி எழுதியுள்ள பாடல் வரிகளை தனுஷ் பாடியுள்ளார். ஆங்கிலம், தமிழ் என கலந்து வெளியாகியுள்ள கில்லர்.....கில்லர்....பாடல் வரிகள் கேப்டன் மில்லரின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறது.
”நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்
நீ படையாய் வந்தால் சவமலை குவியும்
நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்
நீ எருவா பாய கொம்பு முறியும்
நீ ஓடி வந்தா முட்டி செதறும்
கூடி வந்தா பல்லு உதிரும்
சாடி வந்தா சங்கு பிதுங்கும்
பறந்து வந்தா எலும்பு ஒடையும்
நீ தீயா வந்தா அலையா அடிப்பேன்
புயலா வந்தா மலையா தடுப்பேன்
காடா வளர்ந்தா இடியாய் எரிப்பேன்
ஆழ்மனசுல அழிவ வெதைப்பேன்
ஐ எம் த டெவில்....கில்லர்...கில்லர்..கேப்டன் மில்லர்...” என்ற பாடல் வரிகள் கொலை வெறியின் உச்சத்தை காட்டுகிறது.
Captain Miller First single - https://t.co/G4s68b0Mq5 pic.twitter.com/pRxxnxmLuF
— Dhanush (@dhanushkraja) November 22, 2023
கேப்டன் மில்லர் படத்தை மொத்தம் மூன்று பாகங்களாக இயக்க திட்டமிட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் இந்தப் வரிசையில் இரண்டாம் பாகம் என்று அவர் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்க தனக்கு திட்டம் இருப்பதாகவும் அதற்கு மிகப்பெரிய பொருட்செலவு தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களிடையே எந்த மாதிரியான எதிர்பார்ப்பைப் பெறுகிறது என்பதை பார்த்தப் பின்பே அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கலாமா என்று முடிவு செய்ய இருப்பதாக அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Squid Game 2: புதிய போட்டிகளுக்கு தயாரா மக்களே? ஓடிடியில் வெளியானது ஸ்குவிட் கேம் 2 வது சீசன்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion