Singer Chinmayi: விசித்ராவுக்கு பாலியல் தொல்லை.. "எப்ப சொன்னாலும் ஒன்னும் நடக்காது” என விளாசிய சின்மயி..!
ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து நடிகை விசித்ரா தெரிவித்துள்ள தகவல்கள் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து நடிகை விசித்ரா தெரிவித்துள்ள தகவல்கள் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை விசித்ரா, நேற்றைய தினம் நடந்த டாஸ்க் ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி குறிப்பிட்டார். அதாவது ஒரு பிரபல ஹீரோ தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததற்காக அப்படத்தின் ஃபைட்டர்ஸ் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் எனவும் தெரிவித்தார். மேலும் அவரை பிடித்து நியாயம் கேட்க சென்ற என்னை ஸ்டண்ட் மாஸ்டர் அடித்ததாகவும் கூறினார்.
இதுதொடர்பாக நடிகர் சங்கத்தில் முறையிட்டப் போது உரிய நீதி கிடைக்கவில்லை. அதனால் சினிமாவில் இருந்து விலகியதாக குறிப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விசித்ரா சொன்ன அந்த ஹீரோ பாலகிருஷ்ணா என்றும், அந்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜய் என்றும், சம்பந்தப்பட்ட அப்படம் தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு வெளியான Bhalevadivi Basu படம் தான் என ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் நடிகை விசித்ராவுக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உடனே சொன்னாலும், அப்புறமா சொன்னாலும் எந்த பயனும் இல்லை. இந்த ஊர் மற்றும் அரசியல்வாதிகள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. துஷ்பிரயோகம் செய்பவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும், தொழில் செய்வதற்கும், பிரபலமாக இருப்பதற்கும் நினைக்கின்றனர்.
இப்படித்தான் அனு மாலிக் - அலிஷா சைனாய் வழக்கில் வெற்றி பெற்றார்கள், நினைவிருக்கிறதா? இது தெரியாவிட்டால் கூகுள் செய்யவும். உதவி தேவைப்படுவோரை பாதுகாக்கும் அமைப்பு இல்லாத நிலையில் சங்கங்களால் என்ன பயன்? இத்தகைய அமைப்புகளில் உள்ள ஆண்கள் பணம் சம்பாதிப்பதற்காக இத்தகைய ஆண்டுகளில் துஷ்பிரயோகம் செய்பவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை சரிசெய்ததாகத் தெரிகிறது, இல்லையா?
இந்தக் கதையைக் கேட்பது மிகவும் மனவேதனையாக இருக்கிறது. எல்லாப் பெண்களும் இல்லையென்றாலும் ஏதோ ஒரு விதமான துஷ்பிரயோகத்தைப் பற்றிய பல, பல கதைகளில் இவருடையதும் ஒன்று. இன்று ஒரு முக்கிய தொலைக்காட்சி சேனலில் பகிர்ந்துள்ளார். இத்தகைய பெண்கள் அனைவரும் அதை கடந்து வந்திருக்கிறார்கள்.
இதில் மோசமானது என்னவென்றால் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் ஏன் துன்புறுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் பற்றி எப்போது, எப்படி பேச வேண்டும் என்று மற்ற பெண்களுக்கு சொல்லி தர மறுக்கிறார்கள் என புரியவில்லை.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது பேச வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதனை தீர்மானிக்க எந்த மனிதருக்கும் உரிமை இல்லை. அந்த விஷயத்தில் எதையாவது சொல்ல நினைக்கும் எவரும் தங்கள் நாக்கையே கடித்து விழுங்கலாம். பாரதிராஜா முதல் ஆர்.வி.உதயகுமார் வரை ஹீரோயின்களை எப்படி அறைந்தோம் என்று பல இயக்குநர்கள் மிகவும் பெருமையாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அந்தத் துஷ்பிரயோகத்தில் அந்தத் தலைமுறை பெருமிதம் கொண்டது. மேலும் பெண்களுக்கும் பெரிதாக புரிதல் இல்லாததால் அதனை பொறுத்துக் கொண்டனர்.பல இயக்குனர்கள் தங்கள் அசோசியேட்கள் மற்றும் உதவி இயக்குனர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள், அவர்களை கேவலமாக நடத்துகிறார்கள். அது இன்னொரு நாளுக்கான கதையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.