மேலும் அறிய

Dhanush Birthday: 21 ஆண்டுகள்.. 50 படங்கள்.. எத்தனையோ சாதனைகள்.. தனுஷ் என்னும் அசாத்திய திறமை..

நடிகர் தனுஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமாவில் 21 ஆண்டுகளில் தனுஷ் செய்திருக்கும் சாதனை வேறு எந்த நடிகரும் செய்யாதது

நடிகர் தனுஷ் இன்று தனது 40-ஆம் வயதை எட்டுகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் மிக திறமையான நடிகர்களின் ஒருவராக தனுஷ் இன்று அறியப்படுகிறார். தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளாக இருந்து வரும் தனுஷ் நடிப்பு மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பாடகர்,இயக்குனர், தயாரிப்பாளர் என பல முனைகளிலும் சாதித்து வருகிறார். அவர் செய்த சாதனைகள் பல. அவற்றை ஒரு சிறு குறிப்பாக காணலாம்.

தேசிய விருது

 நடிகர் தனுஷ் 2011-ஆம் ஆண்டு அவர் நடித்து வெளியான ஆடுகளம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ஆடுகளம் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் வெற்றிமாறன் என்பது நாம் நினைவுபடுத்த தேவையில்லை.

ஒய் திஸ் கொலவெறி

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாட்டு இடம்பெற்றது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி, அனிருத் இசையமைத்து தனுஷே பாடியும் இருந்தார். இந்தப் பாடல் உலகம் முழுவதும் டிரெண்டானது. முதல் முறையாக எம் டிவியில் ஒளிபரப்பான முதல் தமிழ்ப்பாடல் கொலவெறிப் பாடல்தான். நூறு மில்லியன் வியூஸைக் கடந்த முதல் தமிழ்ப் பாடலாக கொலவெறி இருப்பது அதன் மற்றுமொரு சாதனை.

தயாரிப்பாளருக்கான தேசிய விருது

2014-ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த படத்திற்கான விருதை அதன் தயாரிப்பாளரான தனுஷ் பெற்றுக்கொண்டார். இந்த படத்தை தயாரிக்க தனுஷிடம் கேட்டுக்கொண்டது வெற்றிமாறன். அவர் சொல்லிய ஒரே காரணத்திற்காக தனுஷ் இந்த படத்தை தயாரித்தார்.

பாலிவுட்டில் எண்ட்ரி

2013-ஆம் ஆண்டு தனுஷிற்கு பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராயிடமிருந்து நடிப்பதற்கு அழைப்பு வந்தது. ராஞ்சனா என்கிற படத்தில் மூலமாக தனுஷ் ஹிந்தி சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷின் நடிப்பு அவருக்கு பாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதற்கடுத்ததாக பால்கி இயக்கிய ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ் சேர்ந்து நடித்தார் என்பது கூடுதல் தகவல்.

அடுத்து ஹாலிவுட்

வெகு சில இந்திய நடிகர்களே ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க அழைக்கப் பட்டிருக்கிறார்கள். இர்ஃபான் கான், அமிதாப் பச்சன் என விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் இணைந்தார் தனுஷ். பக்கிரி என்கிற ஹாலிவுட் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்தார் தனுஷ். இதற்கடுத்து ரூஸோ சகோதரர்கள் இயக்கிய தி கிரே மேன் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ரயன் கோஸ்லிங் உடன் இணைந்து நடித்தார் தனுஷ்.

மீண்டும் தேசிய விருது

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் மக்களால் கொண்டாடப் பட்டது. அவரின் நடிப்பிற்கு சாட்சியமாக இரண்டாவது முறையாக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப் பட்டது.

 நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்  படத்தில் நடித்து வருகிறார். அவர் தொட்டதெல்லாம் தங்கமாகிறது. அவர் திரைப்பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 

கேப்டன் மில்லர்

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தை இயக்கி அதில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இது அவரது 50-வது படமாக இருக்கும். மேலும் தனது 51-வது படத்தில் தெலுங்கு திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறார். அவர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள்.

இதையும் படிங்க..

DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!

LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget