மேலும் அறிய

LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!

LGM Movie Review in Tamil: கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் “எல்.ஜி.எம்” (Lets Get Married) படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

LGM Movie Review in Tamil: கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் படம் “எல்.ஜி.எம்” (Lets Get Married)  இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்.ஜி.எம் படத்தை  இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளா ரமேஷ் தமிழ்மணி. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

படத்தின் கதை 

இந்த படத்தின் கதை ஒருபக்கம் யோசித்து பார்த்தால் இதெல்லாம் எங்க நடக்கும் என நினைக்க வைக்கும். இன்னொரு பக்கம் இப்படியெல்லாம் நடந்தா நல்லாருக்கும்ல என ஏங்க வைக்கும் அளவுக்கு லாஜிக் உள்ளது. ஆனால் திரைக்கதையில் அது இல்லவே இல்லை..!

இரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணும், இவானாவும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்பா இல்லாமல் தனியாளாக ஹரிஷ் கல்யாணை வளர்க்கும் அம்மா நதியாவோ எதிர்ப்பே இல்லாமல் சம்மதிக்கிறார். ஆனால் திருமண சம்பந்தம் பேச போன இடத்தில், ஒரு பிரச்சினை. கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்கிறார். இதனால் திருமண பேச்சு நின்று போகிறது. ஆனாலும் ஹரிஷ் கல்யாணை விட மனசில்லாமல் நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் ஒன்றை இவானா பிளான் செய்ய அதை ஹரிஷ் கல்யாண் செயல்படுத்துகிறார். இந்த ட்ரிப் ஒர்க் அவுட் ஆனதா.. மாமியார் நதியாவுடன் மருமகள் இவனா ஒன்று சேர்ந்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும். 

நடிப்பு எப்படி?

நடிப்பில் குறை வைக்காத அளவுக்கு நடித்திருந்தாலும் படத்தில் யாருடைய நடிப்பும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது. முக்கால்வாசி படம்  இவானா, நதியாவை சுற்றுவதால் ஹரிஷ் கல்யாண் இரண்டாம் பாதியில் சிறப்பு தோற்றத்தில் வருவது போல நினைக்க வைக்கிறது. இவானா இன்னும் 2 படங்கள் நடித்தாலும் நமக்கு “லவ் டுடே” படத்தின் நிகிதா கேரக்டர் தான் கண்முன் வந்து போகிறது. நதியா முதல் பாதியில் வயதான அம்மாவாகவும், இரண்டாம் பாதியில் இளம் வயது அம்மாவாகவும் காட்சியளிக்கிறார் (வயசே ஆகாது போல..!). இதேபோல் யோகிபாபுவின் காமெடி நன்றாகவே வேலை செய்துள்ளது. 

படத்தின் நிறை குறை என்ன?

அடிப்படையில் எல்.ஜி.எம்  படத்தின் கதை இன்றைக்கு சர்வ சாதாரணமாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் பயம் கொள்ளும் ஒருவித பிரச்சினையைத் தான் கொண்டுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் இதைத்தான் சொல்லி பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் முதல் பாதி ரசிக்க வைத்த நிலையில் இரண்டாம் பாதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். 

மேலும் இரண்டாம் பாதியில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை மொத்தமாக கதையின் போக்கையே மாற்றிவிட்டு ரசிகர்களை சலிப்படைய செய்துள்ளது. காட்சிகளில் கொஞ்சம் கூட அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. காதல்,சென்டிமென்ட் போன்றவை ரசிகர்களுக்கு மனநிறைவை தரவில்லையோ என தோன்றுகிறது. பாடல்களும் ஒன்றவே இல்லை. 

ஆக மொத்தத்தில் எல்.ஜி.எம் படம் ஏமாற்றம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்Salem Drunkard News | தலைக்கேறிய  போதை வெறிவீட்டை சூறையாடிய வாலிபர்கள் சேலத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Breaking News LIVE 2nd NOV:
Breaking News LIVE 2nd NOV: "இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள்” - துணை முதலமைச்சர் உதயநிதி
Seeman:
Seeman: "கூமுட்டை.. Very Wrong Bro" விஜய்யை தாறுமாறாக தாக்கிப் பேசிய சீமான்!
Embed widget