Harkara Movie: ’ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்’ .. ஓணம் பண்டிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஹர்காரா படக்குழு..!
இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவான ஹர்காரா படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் உருவான ஹர்காரா படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
வி1 மர்டர் கேஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ராம் அருண் கேஸ்ட்ரோ இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘ஹர்காரா’. இந்த படத்தில் ராம் அருண் கேஸ்ட்ரோவும், காளி வெங்கட் இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், கவுதமி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கலர்ஃபுல் பீட்டா மொமண்ட் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ராம் சங்கர் இசையமைத்திருந்தார்.
ஹர்காரா படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.தேனி அருகே மலைகிராமங்களில் இதன் படப்பிடிப்பு நடந்த நிலையில் ட்ரெய்லரும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மலைகிராமத்தில் தபால்காரர் படும் அவஸ்தைகளையும், அங்கு வாழும் மக்கள் குலதெய்வமாக கும்பிடும் பிரிட்டிஷ் கால தபால்காரரின் வாழ்க்கையையும் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
#Harkara Onam Special ❤️
— VCD (@VCDtweets) August 29, 2023
• Buy 1 Get 1 Free ticket on BMS
• CODE : HARKARA
Movie running in theaters now 👍 pic.twitter.com/vRwKs5Znqs
இந்த படம் பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவ் ஆன விமர்சனத்தை தந்ததால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் ஹர்காரா படக்குழு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று ‘ஹர்காரா’ படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொரு டிக்கெட் இலவசம் என்ற அறிவிப்புடன் விதிமுறைகளோடு ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி புக் மை ஷோ செயலியில் கட்டணம் அதிகமாக உள்ள தியேட்டர்களின் இதனை அப்ளை செய்து பார்த்தால் குறைந்தது ரூ.150 வரை தள்ளுபடி கிடைக்கிறது. HARKARA என்ற கோடு கொடுக்கப்பட்டுள்ளது.