Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் பூமிக்கு அடியில் நகைகள் கிடைத்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ரோகிணியின் கர்ப்பத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்னை என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
3 ஆயிரம் சவரன் தங்க நகைகள்:
அதாவது, சாமுண்டீஸ்வரி தனது நிலத்தில் கோவில் ஒன்றை கட்டலாம் என முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்குகிறாள். அப்போது நிலத்தை தேண்டும் போது ஒரு சத்தம் கேட்க அதை தோண்டி பார்க்க மிகப்பெரிய பித்தளை பாத்திரம் ஒன்றை கிடைக்கிறது. அதில் இருந்து மஞ்சள் துணையால் கட்டப்பட்ட 3000 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்படுகின்றன.
சாமுண்டீஸ்வரி முடிவு என்ன?
இந்த தகவல் இவர் முழுக்க பரவ அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிறகு பஞ்சாயத்தை கூட்ட சிவனாண்டி இந்த நகையை ஊர்காரர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து விடலாம் என சொல்கிறான். பூமிக்கு அடியில் கிடைத்தது அனைத்தும் அரசாங்கத்திற்கு தான் சொந்தம் ஆகையால் அரசாங்கத்திடம் இதை ஒப்படைத்து விடலாம் என சாமுண்டீஸ்வரி முடிவெடுக்கிறாள்.
இதனால் ஊர்க்காரர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தாலும் பஞ்சாயத்து தலைவர் சாமுண்டீஸ்வரி எடுத்த முடிவு தன் சரி என சொல்கிறார். மேலும் தொல்லியல் துறை நகையை மறுநாள் பெற்றுக் கொள்வதாக சொல்ல சாமுண்டீஸ்வரி அதனை தனது வீட்டு பீரோவில் வைத்து பூட்டுகிறாள்.
மயங்கி விழுந்த மயில்வாகனன்:
சிவனாண்டி மற்றும் சந்திரகலா ஆகியோர் திட்டமிட்டு வெளியே சென்ற மயில் வாகனத்திற்கு மயக்கம் மருந்து கொடுத்து மயங்க மருந்து கலந்த டீயை கொடுத்து விட மயில்வாகனம் கீழே விழ அந்த விஷயம் சாமுண்டீஸ்வரி குடும்பத்துக்கு தெரிய அனைவரும் பதறி போய் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























