'என் கணவரின் இயல்பை நான் ரசிக்கிறேன்..’ : மனம்திறந்த விஜய் சேதுபதி ஹீரோயின்..
அவரின் இயல்பு எனக்கு பிடிக்கும்.. அதே சமயத்தில் அவரின் பிடிவாதத்தை நான் குட்டி வெறுப்புடன் ரசிக்கிறேன் - நடிகை கத்ரினா
பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப், அவர் நடித்துள்ள போன் பூத் ஓஃப் லேட் என்ற படத்தின் ப்ரோமோஷனில் பயங்கர பிசியாக இருக்கிறார். இப்படத்தில், இவருடன் சித்தாந்த் மற்றும் இஷான் கத்தர் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது கணவரிடம் இருந்து கற்றுக்கொண்ட சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை கத்ரினாவிடம் பேட்டி எடுத்த போது, திடீர் என்று ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் பற்றி பேசினார். “ஆலியாவை கண்டு நான் மெய்சிலிர்க்கிறேன். கர்ப்பமாகியும் அவர் உடற்பயிற்சியை விடாமல் செய்து வருகிறார். நானும் அவரும் ஒரே ஜிம்மிற்கு செல்கிறோம்.”என்று பேசினார்.
View this post on Instagram
பின்னர், உங்கள் திருமணத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேள்வி கேட்ட போது, “மற்றவர்களின் கருத்தை பொறுமையாக கேட்கும் ஒரு பண்பை என் திருமணம் கற்றுக்கொடுத்துள்ளது.” என்று பதிலளித்தார். மேலும் அவர் கணவரான விக்கி கெளசல் பற்றியும், சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். “ அவரின் இயல்பு எனக்கு பிடிக்கும்.. அதே சமயத்தில் அவரின் பிடிவாதத்தை நான் குட்டி வெறுப்புடன் ரசிக்கிறேன்”என்றார்.
View this post on Instagram
இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில், பாலிவுட் தம்பதிகளின் நண்பர்களும் உறவினர்களும் பங்குபெற்று கொண்டனர். மூன்று வருட காதலுக்கு பின்பே இருவரும் மணம் முடித்து கொண்டனர். போன் பூத் திரைப்படத்தை தவிர்த்து, சல்மான் கானின் டைகர் 3 மற்றும் ஆலியா, பிரியங்காவுடன் இணைந்து ஜி.லி சாரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் சூர்யவன்சி என்ற படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ‛சாவடிக்கிறாங்களே என்னைய...’ நீச்சல் குளத்திற்குள் விழுந்த போட்டியாளர்கள்!