ரிவியூக்கு ரூ.3 லட்சம்.. ஓயாத பஞ்சாயத்து.. பார்த்திபனை மீண்டும் வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!
இரவின் நிழல் படத்தை பார்த்த சிலர் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து அவரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து அதனை செருப்பால் அடித்ததோடு தீயிட்டு கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
இரவின் நிழல் படம் தொடர்பாக தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தொடந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் இரவின் நிழல். நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் இரவின் நிழல் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை சரமாரியாக விமர்சித்தார். இதற்கு பார்த்திபன் பதிலடி கொடுக்க, 14 கேள்விகளுக்கு விடையளிக்குமாறு ப்ளூ சட்டை மாறன் மீண்டும் அவரை சீண்டினார். இதற்கிடையில் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இரவின் நிழல் படத்தை பார்த்த சிலர் ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் தெரிவித்து அவரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து அதனை செருப்பால் அடித்ததோடு தீயிட்டு கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
இயக்குனர் பார்த்திபன் அவர்களே..
— Blue Sattai Maran (@tamiltalkies) July 23, 2022
இதற்கு உங்கள் பதில் என்ன ??
My Video - https://t.co/EzzaLuR6iT pic.twitter.com/Ad4VcB0tnb
இந்த பிரச்சனைக்கு பதிலளிக்கும் வகையில் ஆடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டார். அதில் உருவ பொம்மை எரிப்பதற்கு என்றுமே நான் எதிரானவன். மாறனுடைய உருவ பொம்மையை எரித்ததில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அதை செய்தவர்கள் என் ரசிகர்களும் இல்லை. அப்படி செய்தவரை மேடையில் சந்தித்தும் கண்டனம் தெரிவிக்கவில்லை ஏன் எனவும் விளக்கமளித்தார்.
அதனை செய்தவர் ஒரு படம் எடுத்த தயாரிப்பாளர் என்றும், நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் கண்டித்தேன். அப்போது அவர் நான் ஒரு படம் எடுத்தேன் அதற்கு விமர்சனம் செய்வதற்கு என்னிடம் 3 லட்சம் கேட்டார் அந்த கோபத்தில்தான் செய்தேன் என்றார். ஆனால் அதனை என் பெயர் பயன்படுத்தி செய்ததற்காக எதிர்ப்பு தெரிவித்தேன் என பார்த்திபன் கூறியிருந்தார். இந்த சம்பவத்திற்காக ப்ளூ சட்டை மாறனிடம் பார்த்திபன் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதற்கு அருள்நிதி நடித்துள்ள தேஜாவு பட விமர்சனத்தின் போது ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார். பார்த்திபன் குறிப்பிட்ட அந்த தயாரிப்பாளர் யார், அது என்ன படம், என்ன பேசினார், நான் என்ன பதில் சொன்னேன் என்று எதையும் குறிப்பிடாமல் ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். மேலும் உருவ பொம்மை எரித்ததற்கு என் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பதாக பார்த்திபன் கூறுகிறார். நீங்கள் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என கூறி ஏமாற்றிய 12 கோடி தமிழர்களிடம் தான் மன்னிப்பு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாறன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்