மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அஸிம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் (Bigg Boss 6 Tamil Grand Finale LIVE Updates) டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய, இறுதி நாளான இன்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

LIVE

Key Events
Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அஸிம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Background

Bigg Boss 6 Tamil Grand Finale LIVE Updates:

கடந்தாண்டின் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். முதலில் 20 போட்டியாளர்கள் மட்டும் வந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.

15 நபர்கள் வெளியேற்றம்:

இந்த போட்டியில் பங்குபெற்ற ஜி.பி. முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா, நான்காம் வாரத்தில் மகேஸ்வரி, ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி, ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர், ஏழாம் வாரத்தில் குயின்ஸி, எட்டாம் வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷா, ஒன்பதாம் வாரத்தில் தனலட்சுமி, பத்தாம் வாரத்தில் மணிகண்டா, பதினோராம் வாரத்தில் ரச்சித்தா மற்றும் பன்னிரண்டாம் வாரத்தில் ஏடிகே என அடுத்தடுத்து 15 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இறுதிப்போட்டி:

மீதம் இருந்த 6 நபர்களில், கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்‌ஷன் முறையில், மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இந்த சீசனின் இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க்கில் 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவானன் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் அஸிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் பல ஆர்மிகள் உள்ளது. இவர்கள் மூவரும் ஒன்றுக்கொன்று சலைத்தவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

அசீம் vs விக்ரம் vs ஷிவின்

விக்ரமனின் ரசிகர்கள், அவர்தான் டைட்டில் வின்னர் என ஒரு பக்கம் கூற, மறு பக்கம் அஸிமின் ரசிகர்கள் அவருக்காக பிக்பாஸ் டைட்டிலை குத்தகைக்கு எடுத்துவைத்தது போல், டைட்டில் வின்னர் அஸிம் என்ற ஹேஷ்டாகை வைரல் ஆக்கி வருகின்றனர். இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஷிவினின் ரசிகர்கள், “தேவதை ஷிவின்”, “நீதித்தாய் ஷிவின்” என்று அவரை ட்ரெண்ட் செய்து வாக்கு பெற்று வருகின்றனர்.

இவர்களில், யார் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர், ரன்னர் என்பதை இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும். இறுதிப்போட்டியை விஜய் தொலைக்காட்சி அல்லது ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க உள்ளார்.. 

22:53 PM (IST)  •  22 Jan 2023

Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அஸிம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் இருந்த  நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் பிக்பாஸ் சீசன் 6க்கான டைட்டில் வின்னராக அஸிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிக்பாஸ் கோப்பையுடன் ரூ.50 லட்சம் பணம் வழங்கப்பட்டது. 

22:24 PM (IST)  •  22 Jan 2023

Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் ஷிவின் - ரசிகர்கள் அதிருப்தி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற விக்ரமன், ஷிவின், அஸிம் ஆகிய 3 பேரில் ஷிவினுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது - அவருக்கு சரியாக வாக்குகள் விழவில்லை என கமல் தெரிவித்ததால் ரசிகர்கள் அதிருப்தி 

22:11 PM (IST)  •  22 Jan 2023

Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேடைக்கு அழைத்து வரப்பட்ட 3 போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற விக்ரமன், ஷிவின், அஸிம் ஆகிய 3 பேரும் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

21:36 PM (IST)  •  22 Jan 2023

Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ஃபோட்டோ... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஷிவின்...

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மூன்றாமிடம் பிடித்து ஷிவின் வெளியேறியதாகக் கூறப்படும் நிலையில், அவர் சக போட்டியாளர் ரச்சிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

21:09 PM (IST)  •  22 Jan 2023

Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு வந்த எழுத்தாளர்கள் - ரசிகர்கள் மகிழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கமல் வாசிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரைப்பது வழக்கம் - இதன் காரணமாக இறுதிப்போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ராமகிருஷ்ணன், மகுடேஸ்வரன் இருவரும் பங்கேற்றுள்ளனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget