Bigg Boss Nivashini: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஷினிக்கு இவ்வளவு சம்பளமா? வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளரான நிவாஷினி, இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அவருக்கு எவ்வளவு ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ள நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி. பல சீசன்களாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன், தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 பேர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டவர் நிவாஷினி.
நிவாஷினி எலிமினேட்டட் :
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக, ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, ஆயிஷா,ஜனனி, அசிம், தனலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் குறைந்த ஓட்டுகளை பெற்று நிவாஷினி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் நிவாஷினி என்பது தான் நெட்டிசன்களின் கூற்றாக உள்ளது.
View this post on Instagram
பிக் பாஸ் வீட்டில் கிடைத்த நட்பு :
இந்த வாரம் நிவாஷினி தான் வெளியேறுவார் என மிகவும் உறுதியாக கணித்து வைத்திருந்தனர் மற்ற போட்டியாளர்கள். அவர்களின் எதிர்பார்ப்பின் படி, நிவாஷினியே இந்த வாரம் வெளியேறினார். இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே, நிவாஷினிக்கும் மற்றுமொரு போட்டியாளரான அசல் கோலாறு இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அசல் எலிமினேட் ஆன போது மிகவும் அப்செட்டில் இருந்தார் நிவாஷினி.
இவ்வளவு சம்பளமா :
தற்போது சென்னையில் வசிக்கும் நிவாஷினி பிறந்து வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூரில். வெப் சீரிஸ், ஷார்ட் ஃபிலிம் மற்றும் மாடலாக இருந்து வந்த நிவாஷினி, ஒரு ஆடை வடிவைமைப்பாளராகவும், வெப் சீரிஸ் தொடர் ஒன்றின் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததை ஒரு பெரிய பாக்கியமாக கருதிய நிவாஷினி, இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிவிட்டார். ஆனால் இன்னும் கொஞ்ச வாரங்கள் தாக்கு பிடித்து இருக்கலாம் என்பது தான் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு, 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிவாஷினிக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.