Bigg Boss: பிக்பாஸ் ஜோடி! அமீருக்கும், பாவனிக்கும் விரைவில் திருமணம்? பிரியங்கா வெளியிட்ட வைரல் வீடியோ.!
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களை கொண்டு BB ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே இந்த நிகழ்ச்சியில் அசத்தி வந்த பாலா டைட்டில் வின்னராக வெற்றி பெற்று அசத்தினார். இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய் டிவி தற்போது ரசிகர்களை கவர, புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களை கொண்டு BB ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாடகர் வேல் முருகனுக்கு ஜோடியாக இசைவாணி, அமீருக்கு ஜோடியாக பாவனி என பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் சீசன் 5 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், BB ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சிக்கு சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவும், ரன்னர் அப் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பீஸ்ட் படத்தில் நடித்த சதீஸ் ஜட்ஜாக நீதி வழங்க இருக்கிறார். இந்தநிலையில், இந்த நிகழ்ச்சி தொடக்க நாளில் தொகுப்பாளினி பிரியங்கா எடுத்த வீடியோவை விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டது. அப்பொழுது நடன இயக்குநர் அமீரும், பாவனியும் இணைய போவதாக தெரிவித்தார் தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமீர் - பாவனிக்கு திருமணமா..?
பிரியங்கா வெளியிட்ட அந்த வீடியோ தொடக்கத்தில் BB ஜோடிகள் சீசன் 2 தொடங்க இருக்கிறது என்று தெரிவித்தார். வேல்முருகன், சுருதி, ராஜு, அபிஷேக் என வீடியோவில் அனைவரையும் அறிமுகப்படுத்திய பிரியங்கா, அபிஷேக் தற்போது ஜோடி கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, அமீர் - பாவனியிடம் சென்ற பிரியங்கா, இந்த BB ஜோடிகள் நிகழ்ச்சியை நடத்துவதே இந்த ஜோடிகளுக்குதான் என்று கிண்டல் செய்தார். அடுத்தப்படியாக அமீர் - பாவனியிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கு. இந்த நிகழ்ச்சி முடியும்போது கல்யாணம் முடிச்சுட்டு போவீங்களா, இல்ல எங்கேஜ்மென்ட் முடிச்சு போறீங்களா என்று கேள்வி கேட்டார்.
அப்பொழுது பாவனி, "இல்ல அமீருக்கு Friendship Band கட்ட போறேன்" என்று தெரிவித்தார். உடனடியாக, அமீர் "நான் நிறைய எதிர்பார்ப்பில் இருக்கிறேன். ஆனால், பாவனி என்ன எதிர்ப்பார்பில் இருக்காங்க என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். பிரியங்கா தொடர்ந்து கிண்டல் செய்யும் விதமாக லவ் கே, ஜோடி கே, பன் கே, எல்லாம் கே என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்