Bharathi Kannamma : லட்சுமியிடம் கண்ணம்மாவின் பெருமைகளை பேசும் பாரதி...! பாரதி கண்ணம்மா லேட்டஸ்ட் எபிசோடின் அப்டேட்...!
லட்சுமியிடம் தாய் கண்ணம்மாவின் பெருமைகளை பாரதி நெகிழ்ச்சியுடன் பேசியிருப்பது பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு ஒரு நிறைவாக அமைந்துள்ளது.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் லேட்டஸ்ட் எபிசோட் என்னனு பாக்கலாம்.
திடீர்னு கண்ணம்மா தன்னோட பொண்ணு லட்சுமிகிட்ட பாரதிதான் உங்க அப்பா அப்படினு சொல்றா. லட்சுமியும் பாசமா பாரதிகிட்ட ஓடிவரப்ப பாரதி லட்சுமியை தடுத்து, நில்லு. நான் உன் அப்பா இல்லை. இந்த போட்டோவுல இருக்குறாரே அவர்தான் உங்க அப்பானு வருண் போட்டோவை காட்டுறாரு. லட்சுமி ரொம்ப அப்பாவியா டாக்டர் அங்கிள்தான் என் அப்பானு ஏன்மா பொய் சொன்னனு? கேட்பாள். வழக்கம்போல கோலிவுட்டின் வெள்ளித்திரை, சின்னத்திரையில் எழுதப்படாத விதியான டுவிஸ்ட்களை எல்லாம் கனவுகளில் நினைத்து பார்ப்பது போல, இத்தனை சம்பவங்களும் கண்ணம்மா நினைத்து பார்ப்பது நினைவுக்கு வந்திருக்கும்.
அப்போது, லட்சுமியின் கேள்விக்கு பதில் சொல்பவராக பாரதி உள்ளே வருகிறார். அவர் லட்சுமியிடம், அவங்க உனக்காக மொத்த வாழ்க்கையையும் தியாகம் பண்ணி இருக்காங்க. நீ பிறந்ததில் இருந்து இதுவரைக்கும் உன்னை பார்க்க வராத அப்பாவை பத்தி யார்கிட்டயும் கேட்கவே கூடாது. யார் உன் அப்பா பத்தி கேட்டாலும், எல்லாரிடமும் நீ எங்க அம்மாதான் எனக்கு அப்பா, அம்மா எல்லாமேனு சொல்லனும் லட்சுமியோட மனசை டச் பண்ற மாதிரி சொல்லுவாரு. அப்படியே கண்ணம்மாவோட பாசத்துல உருகுன லட்சுமி, அம்மானு கண்ணம்மாவை கட்டிப்பிடிச்சுக்குவா. அப்புறம் கேக் வெட்டி பர்த்டே செலிபிரஷனும் முடிஞ்சுடும்.
மேலும் படிக்க : Boss Ultimate Vanitha Vijayakumar: ரம்யா கிருஷ்ணனுடன் முடிச்சுப்போட்ட ரசிகர்கள்.. வெளியேற இதுதான்காரணம்.. வனிதா ஓபன் ஸ்டேட்மெண்ட்..!
அப்போது, வீட்டிற்கு கிளம்பும் பாரதியை கூப்பிடும் சௌந்தர்யா, நீ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரியான வார்த்தை. கண்ணம்மா பற்றி உன் மனசுல இப்படி ஒரு அபிப்ராயம் இருக்குறது சந்தோஷமா இருக்குனு சொல்ல, நீங்க எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோங்கமானு பாரதி சொல்லிட்டு கிளம்பிடுவாரு.
அப்படியே கண்ணம்மாகிட்ட போன சௌந்தர்யா நீயும் நானும் சொல்லிருந்தாலும், லட்சுமி கேட்ருப்பாளானு தெரியாது. ஆனா, பாரதி சரியா சொல்லி புரியவைச்சுட்டான். இந்த கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துருக்குனு நினைக்கிறேன் கண்ணம்மாவை பாசத்துடன் கட்டி ஆறுதல் கூறுகிறாள். அப்படியே இந்த எபிசோட் முடிஞ்சுருசு்சு.
மேலும் படிக்க : Valimai Review: வலிமையாக வந்துள்ளதா வலிமை? போனியாகுமா போனி கபூர் வியூகம்... எடுபட்டதா அஜித் முயற்சிகள்? உண்மையான வலிமை விமர்சனம் இதோ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்