Boss Ultimate Vanitha Vijayakumar: ரம்யா கிருஷ்ணனுடன் முடிச்சுப்போட்ட ரசிகர்கள்.. வெளியேற இதுதான்காரணம்.. வனிதா ஓபன் ஸ்டேட்மெண்ட்..!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு காரணத்தை வனிதா விஜயகுமார் பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், விக்ரம் படத்தில் நடிக்க இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட, அந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக சிலம்பரசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான ப்ரோமோவும் நேற்று வெளியிடப்பட்டது.
View this post on Instagram
இதனிடையே, அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பிய வனிதா விஜயகுமார் தான் வெளியேற வேண்டும் என பிக்பாஸிடம் கதறினார். அவரை அழைத்து பேசிய பிக்பாஸ், என்ன காரணத்திற்காக வெளியேற நினைக்கிறீர்கள் என்று கேட்க, “ உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு வெளியேறுவதாக கூறினார். இந்த நிலையில் அவர் இதற்காகத்தான் வெளியேறினார், அதற்காகத்தான் வெளியேறினார், உள்ளிட்ட சமூக வலைகளில் வழக்கம் போல் வதந்திகள் அடுக்கப்பட்டது.
அதில் அடிக்கடி கமல்சாருக்காகதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று குறிப்பிட்டு வந்த வனிதா, அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால்தான் வெளியேறினார் என்றும் அடுத்ததாக நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருந்த வாய்ப்பு இருந்ததால்தான் அவர் வெளியேறினார் என்றும் கூறபட்டு வந்தது.
இதுதான் காரணம்
இந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், “ நான் வெளியேறியதை ரம்யா கிருஷ்ணன் உடன் சேர்த்து பேசுறவங்களுக்கு.. நான் எனக்கு மதிப்புக் கொடுத்து இந்த முடிவை எடுத்துருக்கேன். நான் கடுமையான மன உழைச்சலுக்கு உள்ளானேன். என்னால குழப்பமான மனநிலையை தாங்கவே முடியல.. நான் தைரியமா இந்த முடிவை எடுத்துருக்கேன். என் நிலைமையைப் புரிந்துகொண்டு எனக்கு ஒத்துழைத்த என்டெமால் மற்றும் டிஸ்னி குழுவிற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் வேடிக்கையான விளையாட்டு... இந்த குழந்தைகளை நாடகத்தை ரசிப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
To those silly gossip mongers who connect my exit from #BBUltimate to #ramyakrishna
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) February 24, 2022
😂🤭🤣...I chose to respect myself...i was mentally traumatized and couldn't take anymore of the chaos...I chose to be brave enough to make a bold decision..i sincerely thank endemol and Disney
Team for understanding my situation and cooperating with me .life gives you choices and you chose what works for you..I've always made strong decisions and never repented because I know what I want and what I am worth...too grown up for silly games..let the kids enjoy the drama👍🏼
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) February 24, 2022