பாலா - சூர்யா இணையும் படம்... ஷூட்டிங் எப்போது?
ஃபுல் பார்மில் இருக்கும் சூர்யாவும், கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடிக்கும் வேகத்தில் இருக்கும் பாலாவும் மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சபட்ச எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடிகர் சூர்யாவிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் வித்தையை சூர்யா கற்றுக்கொண்டது 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில். அவருக்கு கற்றுக்கொடுத்தது இயக்குநர் பாலா. அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்தில் சூர்யா தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார்.
இதன் காரணமாக பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் எப்போதும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் அவன் இவன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது.
நிலைமை இப்படி இருக்க விக்ரம் மகன் துருவ்வை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் பாலாவின் திரை வாழ்க்கையை புரட்டி போட்டது. இதனையடுத்து பலரது விமர்சனங்களுக்கு ஆளான பாலாவின் இயக்கத்தில் படத்தை தயாரிக்க சூர்யா முன்வந்தார்.
முதலில் தயாரிப்பதாக மட்டும் இருந்த சூர்யா தானே நடிக்கவும் முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் செய்தார்.
இதனையடுத்து படத்தின் பணிகள் வேகமெடுத்தன. அதன்படி படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்களுக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்திருகும் சூர்யா தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வை முடித்துவிட்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும், இதற்காக அவர் 60 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
தன் கேரியரில் தற்போது ஃபுல் பார்மில் இருக்கும் சூர்யாவும், கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடிக்கும் வேகத்தில் இருக்கும் பாலாவும் மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது உச்சபட்ச எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: School Building Collapse: நெல்லை பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு!
Anushka Property | அடேங்கப்பா! அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு தெரியுமா?
Pushpa Review: புஸ்ஸா....? புஸ் அவுட்டா...? புஷ்பா படம் எப்படி இருக்கு? உள்ளதை சொல்லும் விமர்சனம்!
Sai Pallavi | 'தமிழ்நாட்டு பொண்ணு நான்.. அதனால அப்படி' - திரைப்பட விழாவில் பேசிய சாய் பல்லவி!