Anushka Property | அடேங்கப்பா! அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு தெரியுமா?
நடிகை அனுஷ்காவின் சொத்து எவ்வளவு என்று தெரிந்தால் அசந்துபோய்விடுவீர்கள். அவரது சொத்து மதிப்பு ரூ.110 கோடிக்கும் மேல் எனக் கூறுகிறது சினி வட்டாரம்,
![Anushka Property | அடேங்கப்பா! அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு தெரியுமா? Anushka 's property worth mounts to more than 110 crore rupees Anushka Property | அடேங்கப்பா! அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/17/01e64ef96c7ed5089314c709be22a46c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை அனுஷ்காவின் சொத்து எவ்வளவு என்று தெரிந்தால் அசந்துபோய்விடுவீர்கள். அவரது சொத்து மதிப்பு ரூ.110 கோடிக்கும் மேல் எனக் கூறுகிறது சினி வட்டாரம்,
பிங்கி.. இதுதான் அனுஷ்கா ஷெட்டியின் இயற்பெயர்.
ஹைதராபாத்தில் யோகா ஆசிரியராக இருந்த அனுஷ்கா கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
நாகர்ஜூனா தான் அந்தப் படத்தில் ஹீரோ. அப்போது அனுஷ்கா, நாகர்ஜூனாவுக்கு யோகா ஆசிரியராக இருந்தார் என்றும் அதன் மூலமாகவே அவருக்குப் பட வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு கதை உண்டு. இது ஒருபுறம் இருக்க, இவரது யோகா குரு பரத் தாகூரின் மனைவி புகழ்பெற்ற நடிகை பூமிகா என்பதால், அவர்களின் திரையுலக நண்பர் ஈஸ்வர் நிவாஸ் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவிற்கு தேடிவந்ததாகவும் கூறப்படுகிறது.
முதல் படத்திற்குப் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது சில படங்கள் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார். நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார்.
அனுஷ்கா அண்மைக்காலமாக சற்று உடல் எடை அதிகரித்துவிட்டாலும் கூட அந்தக் கால சாவித்ரி மாதிரி முக அழகுக்காகவே இன்னும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்த நிலையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் அனுஷ்காவுக்கு பல சொகுசு பங்களா வீடுகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியல் எஸ்டேட் துறையிலும் கோடிக்கணக்கில் அனுஷ்கா முதலீடு செய்துள்ளாராம்.
பங்களா மட்டுமல்லாமல் பி.எம்.டபுள்யு, ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம். என்னதான் ஆடம்பர வாழ்க்கை என்றாலும் அனுஷ்கா சமூக அக்கறையும் கொண்டிருக்கிறார். ஏழைகளுக்கு உதவ அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளும் வழங்கி வருகிறார்.
TeachAIDS-எனப்படும் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளிலும் தனது பங்களிப்பை செய்து வருகிறார்
இத்தனைக்கும் இடையே அவரது ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.110 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அனுஷ்காவின் தற்போதைய மாத வருவாயை கணக்கிடும்போது அடுத்த ஆண்டில் சொத்து மதிப்பு இன்னும் கூடும் எனக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)