Cinema Round-up : ரீ-எண்ட்ரி கொடுத்த பாபா..! பட்டய கிளம்பும் சில்லா சில்லா..! பிக்பாஸ் டபுள் எவிக்ஷன்..
Cinema Round-up : புது வெர்ஷன் பாபா ரிலீஸ் முதல் பிக்பாஸ் டபுள் எவிக்ஷன் வரை.. இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் இதோ!
வெளியானது பாபா படத்தின் புது வெர்ஷன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்த ’பாபா’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
#BabaRerelease 😱 #BabaReturns 🤘
— Dr.A@z!〽️K@$$!m (@AazimKassim) December 10, 2022
So Baba Will be Born 2nd Life to same Mother ✅ !
Is Thalaivar @rajinikanth Hinting a SEQUEL ❤️🔥🔥 !! 175th Movie ?? He is a God gifted 🎁 Child ! pic.twitter.com/UMooz0aE10
இந்த புது வெர்ஷனில், மாற்றம் செய்யப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சி இடம்பெற்றுள்ளது. 13 காட்சிகள் குறைக்கப்பட்டு, புது பாபா படம் சிறப்பாக உள்ளது என்ற கருத்தை காலையில் 4 மணிகாட்சியை பார்தவர்கள் பதிவிட்டுள்ளனர்.
பாபா படத்திற்கு போட்டியாக களமிறங்கும் சிவாஜி
Relive the magic of #SivajiTheBoss on the silver screen! Watch Superstar @rajinikanth's blockbuster, re-releasing in both Tamil & Hindi, in select PVR & Cinepolis Cinemas between the 9th-15th December!
— AVM Productions (@avmproductions) December 8, 2022
For bookings check @_PVRCinemas & @IndiaCinepolis websites. #AVMProductions pic.twitter.com/zaK8NWVaeo
பாபா படத்திற்கு போட்டியாக ரஜினியின் இன்னொரு படமும் ரிலீசாகியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி சிவாஜி தி பாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ரேயா ஹீரோயினாக நடித்த நிலையில் நடிகை நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இப்போது இந்த படத்தை சில குறிப்பிட்ட தியேட்டர்கள், டசம்பர் 9 முதல் டிசம்பர் 15 வரை திரையிடவுள்ளனர்.
பட்டய கிளப்பும் சில்லா சில்லா பாடல்
துணிவு படம் பொங்கல் பண்டிகையையொட்டி நிச்சயமாக வெளியாகும் என்ற தகவல் முன்பு வந்தது. அதன் பின், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று படத்தின் முதல் சிங்கிளாக சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. நேற்று காலை வந்த அப்டேட்டில், சில்லா சில்லா பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதிரவைக்கும் இப்பாடல் சற்று தாமதமாக நேற்று 6.30 மணிக்கு வெளியாகியது. தற்போது, 8 மில்லியன் பார்வைகளை இது பெற்றுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இருவர்
Exclusive Update of Bigboss S6 Tamil- Double Eviction👍
— Suriya Fans Rage (@_AkashSFC) December 9, 2022
Ayesha and Ram will be Eliminated from the Bigboss house.#BigBossTamil6 #Bigboss
நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் நிலவி வரும் போட்டி கடினமாகி கொண்டே போகிறது. முதல் 60 நாட்கள் கடந்த நிலையில், முதன் முறையாக இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் என்ற முறையில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இரு நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது அவர்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.இந்த வீட்டில் இருந்து இருவர் கிளம்பிய பின், வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர் உள்ளே நுழைவர் என எதிர்ப்பார்ப்பு நிலவிவருகிறது.
மொக்கை வாங்கிய வடிவேலுவின் படம்
இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வெளியான இப்படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Naai sekar returns
— Tea_Time (@Husain_Tweets) December 9, 2022
உன் template வச்சு மத்தவன அடிச்சுருக்கோம் இப்ப உன் template வச்சு உன்னையே அடிக்கப்போறோம்.... pic.twitter.com/jI1X2xDO6S
நேற்று காலை முதல் பல விமர்சனங்கள் வந்த பின்னர், பயங்கர நெகடிவ்வான கருத்துக்கள் பரவிவந்தது. பொதுவாக, ஒரு படம் மொக்கையாக இருந்தால் நடிகர் வடிவேலுவின் பிரபலமான காமெடி காட்சிகளைதான் மீம்ஸ்களின் டெம்ப்ளேட்டாகவோ, அல்லது ட்ரால் வீடியோவின் டெம்ப்ளேட்டாகவோ பயன்படுத்துவர். ஆனால், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு, அவரின் டெம்ப்ளேட்டை பயன்படுத்தும் அளவிற்கு அப்படமானது படு மோசமாக உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.