Atlee - Vijay : வந்துரும்யா வந்துரும்யா.. மீண்டும் இணையும் அட்லீ - விஜய் காம்போ.. சர்ப்ரைஸ் இதுதான்
Atlee - Vijay combo : தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் கூட்டணிகளான அட்லீ - விஜய் காம்போ விரைவில் நான்காவது முறையை இணைவார்கள் என்றும் அது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார் அட்லீ.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் திரைப்படம் 'ஜவான்'.
ஜவான் பிளாக் பஸ்டர் ஹிட் :
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படூகோன்,யோகி பாபு, சஞ்சய் தத் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்திருந்தது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகி 600 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் மட்டுமின்றி இந்தியளவில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற முக்கியமான காரணம் இந்தியா எங்கிலும் உள்ள ஷாருக்கான் ரசிகர்கள். தமிழ் சினிமாவில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி அனைத்தையும் சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களாக கொடுத்து பாலிவுட்டில் அட்லீ என்ட்ரி கொடுத்துள்ள இப்படம் அவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொடுத்துள்ளது.
அட்லீ - விஜய் சக்சஸ் காம்போ :
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வெற்றி கூட்டணியாக கருதப்படும் அட்லீ - இளைய தளபதி விஜய் கூட்டணி. இவர்களின் காம்போவில் வெளியான தெறி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. சமுதாய அக்கறையுடன் வெளியாகும் இவர்களின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நாள் வரவேற்பை பெற்று மில்லியன்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
அந்த வகையில் 'ஜவான்' திரைப்படத்தை மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த இயக்குனர் அட்லீயிடம் பாலிவுட் ரசிகர்கள் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளனர். இளைய தளபதி விஜய்யை மிகவும் மிஸ் செய்வதாகவும் மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணையுமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பதிலளித்து இருந்தார் அட்லீ.
வாவ் அப்டேட் :
அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றிலும் இதே கேள்விக்கு பதிலளிக்கையில், "அதில் என்ன சந்தேகம். நிச்சயமாக நடக்கும் இதுவரையில் நான் இயக்கிய ஐந்து படங்களில் மூன்று படங்கள் விஜய் சாருடன்தான். எனவே சரியான நேரம் கிடைக்கும்போது நிச்சயம் அதுவும் நடக்கும்.
ஜவான் ஷாருக்கானுக்கானது :
அட்லீ - இளைய தளபதி விஜய் இருவரும் இடையே இருக்கும் உறவு மிகவும் பலமானது. ஜவான் படம் குறித்த செய்திகள் வெளிவருவதற்கு முன்னரே அதை அட்லீ பகிர்ந்துகொண்ட ஒரே நபர் விஜய் தான் என்பதை தெரிவித்துள்ளார். ஜவான் திரைப்படம் உருவாக்கப்பட்டது நடிகர் ஷாருக்கானுக்காகத்தான். அந்த கேரக்டரில் ஒருபோதும் வேறு யாரையும் யோசித்து கூட பார்த்ததில்லை. ஆனால் ஜவான் முதல் நாளிலிருந்து, ஸ்கிரிப்ட் முதல் கிளைமாக்ஸ் வரை நான் டிஸ்கஸ் செய்த ஒரே நபர் விஜய் சார்தான். அவர் என்றுமே எனது வளர்ச்சியில் பேக் போனாக இருந்தவர். நாங்கள் ஏராளமான விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம்" என கூறியிருந்தார்.
எனவே நிச்சயமான அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகும் ஒரு படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.