Baby John Movie: வசூலில் வாகை கூடியதா அட்லீ தயாரிப்பில் வெளியான 'பேபி ஜான்'!
அட்லீ தயாரிப்பில், இயக்குனர் காளீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேபி ஜான்' திரைப்படத்தின் முதல் கட்ட வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளரான அறிமுகமாகியுள்ள, இயக்குனர் அட்லீ தான் இயக்கிய தெறி படத்தை தான் இந்தியில் தயாரித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஏ.காளீஷ் என்பவர் இயக்கி உள்ளார். 'பேபி ஜான்'. என்கிற பெயரில் உருவாகியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவான்ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், நடிக்க வாமிகா கபி இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி பேபி ஜான் திரைப்படம் வெளியானது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் னால வரவேற்பை பெற்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பேபி ஜான் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் படம் வெளியாகி மூன்று நாட்கள் முடியாத நிலையில், இதன் வசூல் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பேபி ஜான் திரைப்படம் ரூ. 11.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், வருகிற வாரயிறுதி நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் பாக்ஸ் ஆஃபீசில் பெரும் தொகையை பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

