மேலும் அறிய

Atlee Priya Wedding Anniversary: ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி திருமண நாள் வாழ்த்து தெரிவித்த அட்லீ-ப்ரியா தம்பதி!

எட்டாம் ஆண்டு திருமண நாளையொட்டி இயக்குனர் அட்லீயும், அவரது மனைவி பிரியா அட்லீயும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இளம் இயக்குநர்  அட்லீ. நான்கு படங்கள் இயக்கி நான்கு படங்களிலுமே பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தவர். ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

அட்லீ - பிரியாவின் திருமண நாள் :

இயக்குநர் அட்லீ தனது நெருங்கிய தோழி  பிரியாவை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியா அட்லீ சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அட்லீயின் வெற்றியில் மனைவி பிரியாவின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்று அவரே பல நேர்காணல்களில் கூறியும் இருக்கிறார்.இந்நிலையில் இன்று இயக்குநர் அட்லீ பிரியா தம்பதி தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

அட்லீயின் திருமண நாள் வாழ்த்து :

அட்லீ தனது இன்ஸ்டாகிராமில் திருமணநாள் பதிவாக மனைவி பிரியாவுக்கு அழகிய குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Atlee (@atlee47)

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  "இன்று நமது எட்டாம் ஆண்டு திருமண நாள். இந்த எட்டு வருட பயணம் என்னை ஒரு சிறுவனிலிருந்து ஆணாக மாற்றியுள்ளது.ஒன்றுமே இல்லாமல் நம் வாழ்வை நாம் ஆரம்பித்தோம். இன்று நமக்கு கிடைத்திருக்கும் அனைத்திற்கும் காரணம்… நான் உன்னிடம் இருந்து கற்றுக் கொண்ட பொறுமையும்;நல்ல குணங்களும் தான்! இன்னும் வாழ்வில் நிறைய தூரங்கள் நாம் சென்று வெல்ல வேண்டி இருக்கிறது. எனக்கு ஒரு அழகான தோழியாகவும்,  எல்லாமுமாகவும் இருப்பதற்கு நன்றி!" என்று அழகிய காதல் பதிவை தனது மனைவி பிரியாவிற்கு நடிகர் அட்லீ எழுதி உள்ளார்.

பிரியா அட்லீயின் திருமண நாள் வாழ்த்து :

பதிலுக்கு, பிரியா அட்லீ தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Priya Mohan (@priyaatlee)

அவர் பதிவிட்ட பதிவில்,  "எட்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. என் அன்பு கணவனுக்கு…இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! என் வாழ்வின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு நபராக இருப்பதற்கு நன்றி. என் பலமும், பலவீனமும் நீங்கள் தான்.. எனது எல்லாமும் நீங்கள்தான்…என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்..!" என்று க்யூட்டான திருமண நாள் வாழ்த்தை கணவன் அட்லீக்கு பிரியா தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget