மேலும் அறிய

4 Years Of Magamuni: 'நல்லா இருக்கு.. ஆனா குழப்பமா இருக்கு’.. இரட்டை வேடங்களில் ஆர்யா நடித்த மகாமுனி 4 ஆண்டுகளை நிறைவு..!

ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்த மகாமுனி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன

ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மகாமுனி

மெளனகுரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சாந்தகுமார். தனது முதல் படத்தை இயக்கியப்பின் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது இரண்டாவது படமாக மகாமுனி  படத்தை இயக்கிநார். இரட்டை வேடங்களில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ரோஹினி , ஜெயபிரகாஷ் , காளி வெங்கட் இளவரசு இந்தப் படத்தில் நடித்தார்கள். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார்.

மகா + முனி

மகாதேவன் மற்றும் முனிராஜ் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் படம்தான் மகாமுனி. ஒரு பிரபல அரசியல்வாதியின் அடியாளாக இருப்பவன் மகா. தனது மனைவி விஜி (இந்துஜா) மற்றும் மகன் பிரபா தான் இவனுக்கு இந்த உலகத்தில் முக்கியமான இரண்டே நபர்கள். திருமணம் செய்துகொள்ளாமல் கடைசிவரை பிரம்மசாரியாக இருக்க நினைப்பவன் முனி.  விவேகானந்தரின் கொள்கைகளை பின்பற்றுபவன். மது , காதல் , பணம் , குடும்ப வாழ்க்கை என உலகத்தில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து வாழ்பவன் மகா. அதே நேரத்தில் இதை எல்லாம் தனது வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு இயற்கை விவசாயம் செய்து வருபவன் முனி. இப்படி இரண்டு துருவங்களைச் சேர்ந்த இந்த கதாபாத்திரங்கள் அவரவர வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சவால்களால் ஒரு கட்டத்தில் சந்தித்து கொள்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான் படத்தின் கடையில் உயிரோடு இருக்க போகிறார்கள். அது மகாவா முனியா.

மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. படம்  குழப்பமாக இருந்தது என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக   இருந்தது.  ஒட்டுமொத்தமாக என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் என்கிற குழ்ப்பமே இதற்கு காரணம் ,

தனது முதல் படமான மெளனகுரு படத்தின் மூலமாக ரசிகர்களின் கவணத்தை ஈர்த்த இயக்குநர் சாந்தகுமார்  முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தை மகாமுனி படத்தில் கையாண்டிருக்கிறார். மெளனகுரு படத்தில் இருக்கும் ஒரு சில காட்சிகளின் வழியாக இயக்குநருக்கு ஆன்மீகத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். எல்லாவற்றையும் விலகி நின்று பார்க்கும் அவரது குணத்தை அவரது வசனங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.  

ரசவாதி

தற்போது தனது மூன்றாவது படமாக ரசவாதி என்கிற படத்தை இயக்கியுள்ளார் சாந்தகுமார். எழுதி இயக்கியது மட்டுமில்லாமல் இந்தப் படத்தை தனது சொந்த நிறுவனத்தின் கீழ் தயாரித்தும் இருக்கிறார். சமீப காலங்களில் தனது குரலுக்காக அதிகம் பாராட்டப்படும் நடிகர் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் கதாநாயகனாக  நடித்துள்ளார் ரம்யா சுப்ரமணியம் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளார்கள், தமன் இசையமைத்து தேசிய விருது வென்ற சாபு ஜோசப் பத்தொகுப்பு செய்துள்ளார்.  சமீபத்தில் ரசவாதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இயக்குநர்.

மேலும் படிக்க : Bharat Row: அப்பாடா..! ”இந்தியா பெயரை மாற்றுவது எல்லாம் வதந்தியே” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஓபன்டாக்

Bharat Row: இந்தியா பெயரை விட்டுக்கொடுப்பாரா பிரதமர் மோடி? ஜின்னா திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் பாகிஸ்தான்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget