Bharat Row: இந்தியா பெயரை விட்டுக்கொடுப்பாரா பிரதமர் மோடி? ஜின்னா திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் பாகிஸ்தான்?
பாரதம் என இந்தியாவின் பெயர் மாற்றப்பட்டால் அதற்கு உரிமை கோர, பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசு இந்தியா என்ற பெயரை உரிமை கோர வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பழைய வரலாறு:
கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி வரைவு விதி 1 அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தின் போது, பாரத், ஹிந்துஸ்தான், ஹிந்த், பாரத்பூமி, பாரத்வர்ஷ் போன்ற பெயர்கள் முன்மொழியப்பட்டன. சில வரைவுக் குழு உறுப்பினர்கள் பாரதம் என்ற பெயரை தேர்வு வழிமொழிந்தனர். ஆனால், பெரும்பாலானோர் இந்தியா என்ற புதிய பெயரை விரும்பினர். இறுதியில் "இந்தியா, அதுவே பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்ற அறிக்கைக்கு அரசியலமைப்புச் சபை ஒப்புதல் வழங்கியது.
எதிர்ப்பு தெரிவித்த ஜின்னா:
சுதந்திரத்திற்குப் பிறகு நாடு பிளவுபட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தலைவரான முகமது அலி ஜின்னா, நமது நாடு 'இந்தியா' என்ற பெயரை பயன்படுத்துவதை எதிர்த்தார். அவருடைய கூற்றின்படி, 'இந்தியா' என்பது முழு துணைக்கண்டத்தையும் உள்ளடக்கியது. அதாவது சிந்து சமவெளி உட்பட எல்லா பகுதியையும் உள்ளடக்கியதே இந்தியா. இண்டஸ் வேலி பகுதி முழுக்கவே இந்தியா. அதானால் இந்தியாவிற்கு இந்தியா என்று வைக்க கூடாது. 'இந்துஸ்தான்' என்ற பெயரை பயன்படுத்தலாம் என பரிந்துரைத்தார், ஆனால் ஜின்னாவின் பரிந்துரையை நிராகரித்த நேரு நமது நாட்டிற்கு 'இந்தியா' என்று பெயரிட்டார்.
”பாரத” சர்ச்சை:
இந்த நிலையில் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையிலும், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றப்பட வேண்டும். ஒருவேளை இந்திய அரசு செய்தால், அதன் மூலம் 76 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்னாவின் விருப்பத்தை பாகிஸ்தான் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் திட்டம் என்ன?
இந்த நிலையில், இந்தியாவின் பெயரை மாற்றினால் சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தங்களது பெயரை மாற்றுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா பதிவு செய்தால், உடனடியாக இந்தியா எனும் பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோர முயலும் வாய்ப்புள்ளது. இதன் மூலம், இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்ட பிறகு மீண்டும் அதை இந்தியா என்று மாற்றாமல் தடுக்க இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் மூலம் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் பல ஆண்டு கனவு நிறைவேற்றப்படும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்பட் நடந்தால், இதுவரை இந்தியா என அறியப்பட்ட நமது நாடு இனி எப்போதும் பாரதம் எனவும், பாகிஸ்தான் என அறியப்பட்ட அந்த நாடு இனி எப்போது இந்தியா என்றும் சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்தப்படும். இந்த பெயர் மாற்ற நடவடிக்கை பல்வேறு யூகங்களை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில், இவை அனைத்திற்குமான பதில் செப்டம்பர் 18 தொடங்கி 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தெரிந்துவிடும்.