Annapoorani Movie X Review: ஹவுஸ் புல்லாய் அன்னபூரணி! இது பெண்கள் கொண்டாடும் வெற்றி.. ட்விட்டரில் தெறிக்கும் விமர்சனங்கள்!
Annapoorani Movie Twitter Review: அன்னபூரணி படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணலாம்.
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது 75வது படமான அன்னபூரணி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 1ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் ரிலீசாசியுள்ளது.
நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கிய இந்த திரைப்படம் நயன்தாராவுக்கு மேலும் மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா டைட்டில் ரோலில் அன்னபூரணி, ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் எடிட்டிங்கில் பிரவீன் ஆண்டனி பணியாற்றியுள்ளார்.
படத்தின் கதை
#Annapoorani FDFS at Rohini #LadySuperstar75 🤩🔥🔥🔥 1st half finished #N75 pic.twitter.com/tbp7iyxJip
— Dreamer (@remaerdkihtraK) December 1, 2023
சுருக்கம்:
அன்னபூரணியாக நடித்திருக்கும் நயன்தாரா ஒரு உணவுப் பிரியர். படத்தில் இவருக்கு சிறு வயது முதலே உணவின் மீதும், சமையல் மீதும் அதிக நாட்டம் இருந்து வருகிறது. இவர் பிரமாண குடும்பத்தில் பிறந்ததால், மாமிச உணவுகளை சாப்பிட்டாலே குற்றமாக பார்க்கப்படும். அப்படி இருக்க, நயன்தாராவுக்கு உலகின் சிறந்த சமையல்காரராக மாற வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுகிறது. இதையடுத்து இவர் அவரது குடும்பத்திற்கு தெரியாமல் ஒரு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது, நயன் தன் லட்சியத்தை அடைந்தாரா என்பது தான் கதை!
இந்தநிலையில், அன்னபூரணி படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணலாம்.
#Annapoorani 3/5 : A clean film aimed at families told in a straightforward manner about an orthodox Brahmin girl who aims to be the best chef in India. It is the triumph of an underdog story and #LadySuperstarNayanthara carries the film on her shoulders with absolute ease &… pic.twitter.com/ZDexJKgmu2
— sridevi sreedhar (@sridevisreedhar) December 1, 2023
#Annapoorani was a very neatly packed movie from @Nilesh_Krishnaa ❣️. Execution was perfect 👌. Onwards and upwards ayya🙌#nayanthara ma'am was classy 😊. Beautiful visuals from @sathyaDP 👏. Please watch this excellently cooked movie in theatres from tomorrow 🤗
— முரளி கார்த்திக் (@im_the_TWIST) November 30, 2023
#Annapoorani is for the family and the audiences who seek feel-good flavour! pic.twitter.com/3lijikDjvS
— Rajasekar (@sekartweets) December 1, 2023
ஆக மொத்தம் இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.