Yathra 2 Trailer: ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கும் ஜீவா.. யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமான யாத்ரா 2-வின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்
ஆந்திர பிரதேசத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ள நிலையில் இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலும் உடன் நடக்க உள்ளதால் அம்மாநிலத்தில் இப்பவே தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது. இம்முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் வரிந்துக்கட்டிக்கொண்டு களம் காண்கிறது.
யாத்ரா படம்
இதனிடையே ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவரும், தற்போதைய முதலமைச்சருமான ஜெகன் மோகனின் அப்பாவுமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி “யாத்ரா” என்ற படம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெளியானது.
மஹி ராகவ் இயக்கிய இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றது. அந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை காண்பித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
யாத்ரா 2 படம்
இதனிடையே யாத்ரா படத்தை இயக்கிய இயக்குநர் மஹி இதன் 2 ஆம் பாகம் உருவாகும் என தெரிவித்திருந்தார். அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்ற நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அவரின் இளமை காலம் முதல் ஆந்திர முதலமைச்சர் ஆனது வரை இதில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. யாத்ரா 2 படத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பது உறுதியானது. கிட்டத்தட்ட இருவரின் தோற்றமும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்பதால் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் யாத்ரா 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறப்பில் இருந்து தொடங்கும் படம், ஜெகன்மோகன் ரெட்டியின் எழுச்சி, யாத்திரை, அவரின் வெற்றி என அனைத்தையும் காட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Poonam Pandey: “நான் இன்னும் சாகல”..வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே.. அதிர்ந்து போன திரையுலகினர்!