ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கே ஆப்பு வைத்த அமேசான்! இது என்னடா தலைவர் மகளுக்கு வந்த சோதனை!
குருதிப்புனல் வெப் சீரிஸ்க்காக அமேசான் நிறுவனத்துடன் கை கோர்த்த நிலையில் இப்போது என்ன நடந்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது .

சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துக்கு 2 மகள்கள். அதில் ஒருவர் தான் இளைய மகள் சவுந்தர்யா. இவரும் சினிமாவில் இயக்குனராக கால் பதித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கோச்சடையான் பதின் மூலம் தான் ஒரு இயக்குனராக தன்னுடைய பணியை துவங்கினார்.
வரலாற்று காவிய படமான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் 3 ரோலில் நடித்திருந்தார். மேலும், தீபிகா படுகோனே, ஷோபனா, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ஏதோ புதிதாக காட்டுகிறேன் என்ற பெயரில் ரஜினியை கார்ட்டூனில் காட்டினார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கவே இந்தப் படம் பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை. ஆனால் பாடல் ஹிட் கொடுத்தது. இதற்கு முக்கிய காரணம் படத்திற்கு இசை ஏ ஆர் ரஹ்மான்.
ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துடன் இணைந்து சவுந்தர்யா ரஜினிகாந்தும் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். ஆனால் படம் பெரியளவில் நஷ்டத்தை சந்திக்கவே ஈரோஸ் நிறுவனத்திற்கு சவுந்தர்யா தரப்பில் பண பட்டுவாடா செய்யப்பட வேண்டி இருந்தது. ஆனால், சவுந்தர்யா தரப்பில் அதனை செய்யவில்லை. இதன் காரணமாக ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நீதிமன்றத்தின் உதவியை நாடியது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்தது. இந்த நிலையில் தான் மீண்டும் அப்படியொரு இடியாப்ப சிக்கலில் சவுந்தர்யா சிக்கியிருக்கிறார். 
தற்போது சவுந்தர்யா குருதிப்புனல் என்ற வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கிறார். இந்த சீரிஸை அமேசான் பிரைம் நிறுவனமும் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு தான் முதல் காப்பி. என்கிற அடிப்படையில் அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து குருதிப்புனல் வெப் சீரிஸை தயாரித்திருக்கிறது. அமேசான் நிறுவனம் கொடுத்த தொகைக்குள் வெப் சீரிஸை முடிக்க வேண்டும். ஆனால், வெப் சீரிஸ் 80 சதவிகிதம் மட்டுமே எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 20 சதவிகிதத்திற்கு பண பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதை முடிக்க மீண்டும் அமேசான் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால், ஏற்கனவே பேசியபடி அமேசான் நிறுவனம் முழு தொகையையும் கொடுத்துவிட்டது. எஞ்சிய பகுதிகளை முடிக்க சவுந்தர்யா தான் பணம் போட வேண்டும் என கூறி சவுதாரியாவுக்கு ஆப் பண்ணிவிட்டதாம்.
அமேசானை நம்பி இது என்ன நமக்கே ஆப்பாகி விட்டது என செம்ம கடுப்பில் இருக்கிறாராம் சவுந்தர்யா. கை காசை போட்டு வெப் தொடரை முடிப்பாரா? அல்லது பிரச்சனையில் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.





















