vidamuyarchi : புதுமாப்பிள்ளை போல் அஜித்...ஜோடி சேர்ந்து நிற்கும் ரம்யா
இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு மீதமிருக்கும் அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை ரம்யா இணைந்துள்ளார்
விடாமுயற்சி
அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் வரும் பொங்கல் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மகிழ் திருமேணி இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. த்ரிஷா , ஆரவ் ,அர்ஜூன் , ரெஜினா உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் சில நாட்கல் தொடங்கியது. அஜித் மற்றும் த்ரிஷா இடையிலான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மறுபக்கம் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. இன்னும் சில நாட்களே படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில் இப்படத்தில் மற்றொரு நடிகை இணைந்துள்ளார்.
விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைந்த ரம்யா
விடாமுயற்சி படத்தில் தற்போது நடிகை ரம்யா இணைந்துள்ளார். பட்டு வேஷ்டி சட்டையில் அஜித் புது மாப்பிளை போல் இருக்க அவருடன் ஜோடி சேர்ந்து நடிகை ரம்யா இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளதால் படத்தில் அவருக்கு சில்ல ரோல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Actress @actorramya is on board for VIDAAMUYARCHI 🔥 Gear up to witness her elegance on screen. 🤩#Vidaamuyarchi From Pongal 2025 #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial… pic.twitter.com/wBtaLyJLym
— Lyca Productions (@LycaProductions) December 20, 2024
கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலாக காத்திருந்து வருகிறார்கள். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கூடிய விரைவில் படத்தில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
குட் பேட் அக்லி
மறுபக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு படு வேகத்தில் நடந்து வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னதாக தேவிஶ்ரீ பிரசாத் இசையமைக்க இருந்து பின் ஜிவி இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார். பிரசன்னா , யோகிபாபு , த்ரிஷா , அர்ஜூன் தாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்கிறார்கள்.
மேலும் படிக்க : ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
Shiva Rajkumar : கண்களில் கண்ணீர்... சிகிச்சைக்கு அமெரிக்கா புறப்பட்ட ஷிவராஜ்குமார்