விடுதலை - 2 திரைப்படம் எப்படி இருக்கு?
பெருமாள் வாத்தியாரை பிடிக்க உதவி செய்த குமரேசன் (சூரி) யார்? பெருமாள் வாத்தியார் யார்? யாருக்காக அவர் போராடுகிறார் ? ஆகியவற்றை விளக்குகிறது விடுதலை இரண்டாம் பாகத்தின் கதை!
மிகத் தீவிரமான அரசியல் கொள்களையும் விவாதங்களையும் மையமாக வைத்து நகர்கிறது படம். கருத்து சொல்வதாக இல்லாமல் கதையின் சுவாரஸ்யத்தை குலைக்காமல் கையாண்டிருக்கிறார் வெற்றிமாறன்.
வர்க்க சாதி முரண் , மாற்றத்திற்கு வன்முறை தீர்வா ? மக்களுக்காக போராடுபவர்களை அரசு என்னவாக சித்தரிக்கிறது என மிகத் தெளிவாக விவாதித்துச் செல்கிறது படம்.
பெரும்பாலான காட்சிகளில் பின்னணி இசை காட்சியின் இயல்பை கெடுக்காமல் அமைந்துள்ளது.படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இரு பாடல்கம் பாலைவனத்தில் மழைபோல...
பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் கரியரில் இது ஒரு மைல் கல்.போராட்ட களத்தில் இருக்கும் தோழராக, ஆயுதம் ஏந்திய புரட்சிக்காரனாக அசத்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதி காதலைச் சொல்லத் தெரியாத அப்பாவியாக என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். அவருக்கு ஆன் ஸ்கிரினில் அதே அளவிற்கு சவால் விடும் வகையில் உள்ளது மஞ்சு வாரியரின் நடிப்பு.
அரசு இயந்திரத்தில் ஒரு சாதாரண கான்ஸ்டெபிளாக இருக்கு குமப்ரேச பெருமாள் வாத்தியாரின் வாழ்க்கையின் மூலம் தன்னையும் தன்னைச் சுற்றி இயக்கும் அதிகார சக்கரத்தையும் தெளிவாக புரிந்துகொள்கிறார்.
கிஷோர் , கென் கருணாஸ் , ராஜீவ் மேனன் , இளவரசு கெளம் மேனன் ஆகியவர்களுக்கு குறைவான காட்சிகள் என்றாலுமே மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராஜீவ் மேனனின் நடிப்பில் உள்ள இயல்பு ஆச்சரியமடைய வைக்கிறது
முழுக்க முழுக்க மக்களுக்கான இயக்குநராக இப்படத்தை எடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.