Shiva Rajkumar : கண்களில் கண்ணீர்... சிகிச்சைக்கு அமெரிக்கா புறப்பட்ட ஷிவராஜ்குமார்
சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பிச் சென்ற நடிகர் ஷிவராஜ்குமார் தான் முழு குனமடைந்து ஜனவரி மாதம் திரும்பி வருவேன் என ரசிகர்களுக்கு உறுதியளித்தார்
ஷிவராஜ்குமார்
கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் சிவராஜ்குமாரின் அண்ணன் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் சிவராஜ்குமாருக்கு புற்று ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை தேவை இருப்பதால் அவர் அமெரிக்க சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் கடந்த சில நாட்கள் முன்பாக தகவல் வெளியாகியது
இதுகுறித்து சிவராஜ் குமார் கூறுகையில், “எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் அது புற்று நோய் இல்லை. அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதும் உண்மைதான். அந்த நோய் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை." என தெரிவித்தார். இந்நிலையில் ஷிவராஜ்குமார் இன்று சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பிச் சென்றார். அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் மியாமி புற்று நோய் சிகிச்சை மையத்தில் வரும் 24 ஆம் தேதி அவருக்கு சிகிச்சை நடைபெற உள்ளது. சிகிச்சை முடிந்து ஒரு மாத கால ஓய்விற்கு பின் ஜனவரியில் அவர் மீண்டும் பெங்களூரு திரும்ப இருக்கிறார். பெங்களூர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் உணர்ச்சிவசமாக பேசினார்
நான் மீண்டு வருவேன்
" புற்று நோய் என்றதும் நானும் என்னைச் சுற்றி இருப்பவர்களும் பதற்றமடைந்து விட்டோம். ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் பயப்படும் அளவிற்கு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. சிகிச்சை முடிந்து ஜனவரி மாதம் நான் பெங்களூர் திரும்புவேன்." என தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசியபோதே ஷிவராஜ்குமார் கண் கலங்கினார். அவர் முழுமையாக குனமடைந்து திரும்பி வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
Get well soon @NimmaShivanna
— Nammavar (@nammavar11) December 20, 2024
Prayers for your quick recovery
Wish you will join hands with your most favorite star #KamalHaasan soon#ShivaRajkumar 🙏🙏#KH #RKFI pic.twitter.com/OwHLGrDDnh
சிவராஜ்குமார் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் சிறப்பு தொற்றத்தில் வந்து அசத்தினார். சிவராஜ்குமாரின் எண்ட்ரிக்கு தமிழ் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.