மேலும் அறிய

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது குறித்து தெலங்கானா போலீஸை விமர்சித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

அல்லு அர்ஜூன் கைது 

புஷ்பா 2 படத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து  தீவிர சிகிச்சையில் இருந்த அவரது 9 வயது மகனும் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்தது. முன் ஏற்பாடுகள் இன்றி திரையரங்கிற்கு வருகை தந்த காரணத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸ் கைது செய்து பதினைந்து நாள் ரிமாண்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அல்லு அர்ஜூன் கைது குறித்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கல் அதிருபதியை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெலங்கானா போலீஸை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஶ்ரீதேவையை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீற்களா

" நடிகர் அல்லு அர்ஜூனி கைதை எதிர்த்து ஒவ்வொரு பிரபல நட்சத்திரமும் போராட வேண்டும்.  ஒரு நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ அவர் பயங்கரமான பிரபலமாக இருப்பது அவர்களின் குற்றமா. என்னுடைய படப்பிடிப்பின் போது நடிகை ஶ்ரீதேவியை பார்க்க வந்த கூட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தார்கள். அப்போ ஶ்ரீதேவியை கைது செய்ய தெலங்கானா போலீஸ் சொர்க்கத்திற்கு செல்வார்களா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அல்லு அர்ஜூன் கைது முழு விவரம்

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. அப்போது  ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க மனைவி ரேவி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்தது பாஸ்கர் குடும்பம். அப்போது திரையரங்கத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு நடைபெற்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பாஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்த ரேவதி (39) மற்றும் மகன் தேஜா காயமடைந்தார்கள். காயமடைந்த இருவருக்கும் உடனே முதலுதவி அளிக்கப்பட்டது என்றாலும் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகன் தேஜா அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரூ 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கினார். மேலும் சிறுவன் சாய் தேஜின் மருத்துவ செலவுகளுக்கு பொறுப்பேற்றுள்ளார்

தலைப்பு செய்திகள்

முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்த நடிகர் நானி.. ரசிகர்களுடன் ‘The Paradise’ பார்க்க ஆசை!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
செப்டம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
சூர்யா நடிக்க இருந்த ‘கர்ணா’ படமா? ராகவா லாரன்ஸின் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget